சாம்சங்கின் பெரிய அறிவிப்பு..! AI உங்களுக்கு பதிலாக இனி போனில் பேசும்...

சாம்சங்க் நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்தை அழைப்புகளுக்கு பயன்படுத்தும் வகையில் திட்டமிட்டுள்ளது. இனி ஏஐ தொழில்நுட்பம் உங்களுக்கு பதிலாக அழைப்புகளுக்கு பேசும்  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 25, 2023, 06:40 PM IST
சாம்சங்கின் பெரிய அறிவிப்பு..! AI உங்களுக்கு பதிலாக இனி போனில் பேசும்... title=

Samsung AI Features: மற்ற ஆண்ட்ராய்டு போன்களில் இல்லாத பல அம்சங்களை சாம்சங் அதன் பயனர்களுக்கு வழங்குகிறது. இப்போது குரல் உதவியையும் வழங்க திட்டமிட்டுள்ளது. அதாவது, அழைப்புகளுக்கு உங்களுக்கு பதிலாக இனி ஏஐ தொழில்நுட்பம் பேசும். இதற்காக சாம்சங்க் கொண்டு வந்திருக்கும் ஏஐ குரல் உதவி தொழில்நுட்பத்தின் பெயர் Bixby. ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் வாய்ஸ் அசிஸ்டென்ட்கள் இருந்தாலும், சாம்சங் தனது சொந்த குரல் உதவியாளரையும் இனி வழங்கும். உங்களுக்கு பதிலாக போனில் வரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்கும். 

சாட்ஜிபிடி வருகைக்குப் பிறகு தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய தலைகீழ் புரட்சி ஏற்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த செயலிகள் அனைத்து வேலைகளையும் இதுவரை நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் முடித்து ரிசல்டை கொடுக்கின்றன. எந்த தொழில்நுட்ப உதவி தேவைப்பட்டாலும் அதற்கான ஏஐ போட்கள் இருக்கின்றன. இவற்றின் உதவியால் உங்களுக்கு தேவையானதை நீங்கள் வடிவமைத்துக் கொள்ள முடியும். மனித உதவி அதாவது தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவி உங்களுக்கு தேவைப்படாது.

மேலும் படிக்க | iPhone 14 Plus இல் பம்பர் சலுகை, பல ஆயிரம் ரூபாய் தள்ளுபடி

இத்தகைய புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் தொழில்நுட்பத்தை சாம்சங்க் நிறுவனம் தங்கள் தொலைபேசிகளில் இனி பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சாம்சங்க் நிறுவனத்தின் Bixby குரல் உதவியாளரின் சிறப்பு என்னவென்றால், உங்கள் குரல்போன்ற பிரதிபலிப்பை வழங்கும். அதனால் எதிர்புறத்தில் பேசுபவர்களுக்கு நீங்கள் பதில் அளிக்கிறீர்கள் என்றே நினைப்பார்கள். சாம்ங்கின் இந்த பயன்பாடு தொலைபேசியை இன்னும் பயனுள்ளதாக மாற்றும். சாம்சங்கின் இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. தற்போது கொரியாவில் மட்டுமே அணுக முடியும்.

சாம்சங்கின் புதிய அம்சம் எவ்வாறு செயல்படும்?

Samsung Bixby Custom Voice Creator மூலம், உங்கள் குரலில் பல வாக்கியங்களைப் பதிவு செய்யலாம். அவை அழைப்பிற்கு பதிலளிக்கும் வகையில் இந்த வாக்கியங்களைப் பயன்படுத்தலாம். Bixby Text Call போன்ற அம்சமும் இருக்கிறது. குரல் அழைப்பு மூலம் பதில் அளிக்க முடியாத தருணத்தில் இது டெக்ஸ்ட் வழியாகவும் பதிலளிக்கும். 

மேலும் படிக்க | Chat GPT: சாட்ஜிபிடி ஓபன் ஏஐ போட்ட மாஸ் பிளான்! கூகுளுக்கு சவால்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News