எஸ்8 என்ற பெயரிலான ஸ்மார்ட்ஃபோனை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
உலக அளவில் ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் முன்னிலை வகித்துவந்த சாம்சங் நிறுவனம் நோட் 7 என்ற ஸ்மார்ட்ஃபோனை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது.
அந்த ஸ்மார்ட்ஃபோன் தீப்பற்றி எரிந்ததாகக் புகார் எழுந்ததன் காரணமாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் விமானப் பயணத்தின்போது, நோட் 7 ஸ்மார்ட்ஃபோன் தடை செய்யப்பட்டது.
இதையடுத்து, உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்ட நோட் 7 ஸ்மார்ட்ஃபோன்களை திரும்பப் பெறுவதாக, சாம்சங் அறிவித்தது. மேலும், வாடிக்கையாளர்களிடையே அதன் நம்பகத்தன்மையும் குறைந்தது.
இந்நிலையில் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்ஃபோனை, சாம்சங் தற்போது அறிமுகம் செய்துள்ளது. நியூயார்க் நகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம் செய்யப்பட்டது.
6.2 இன்ச் மற்றும் 5.8 இன்ச் என இருவேறு தொடுதிரை அம்சங்களை கொண்டதாக, எஸ்8 ஸ்மார்ட்ஃபோன் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் மற்ற அம்சங்கள் பற்றி தெரிவிக்கப்படவில்லை.
ஏப்ரல் 21-ம் தேதி முதலாக, இந்த ஸ்மார்ட்ஃபோன் விற்பனைக்கு வரும் என்று, சாம்சங் தெரிவித்துள்ளது.