SMS மூலம் பாஸ்டேக் பேலன்ஸை தெரிந்து கொள்ளலாம்; ரொம்ப ஈஸி

FasTag பேலன்ஸை தெரிந்து கொள்ளும் வழிமுறையை மேலும் எளிமையாக்கியுள்ளது எஸ்பிஐ.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 13, 2022, 07:37 AM IST
  • எஸ்பிஐ வங்கியின் புதிய அறிவிப்பு
  • பாஸ்டேக் கட்டணத்தை SMS மூலம் தெரிந்து கொள்ளலாம்
SMS மூலம் பாஸ்டேக் பேலன்ஸை தெரிந்து கொள்ளலாம்; ரொம்ப ஈஸி title=

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு பாஸ்டேக் (FASTag) மூலம் இணையவழியில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை நடைமுறைப்படுத்தியது. இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்ட பிறகு ஒரு வாகனம் சுங்கச்சாவடியைக் கடக்க சராசரியாக 47 வினாடிகள் மட்டுமே ஆகிறது. இதற்கு முன்பு ஒரு மணி நேரத்துக்கு 112 வாகனங்கள் மட்டுமே சுங்கச்சாவடியை கடந்த நிலையில், தற்போது 260 வாகனங்கள் ஒருமணி நேரத்தில் சுங்கச்சாவடியை கடக்கின்றன.

மேலும் படிக்க | Realme C33: ரூ.549-க்கு ரியல்மீ ஸ்மார்ட்போனை வாங்கலாம்; ஆனால் ஒரு கண்டிஷன்

அந்தளவுக்கு நேரத்தை மிச்சப்படுத்தும் பாஸ்டேக் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. எஸ்பிஐ பாஸ்டேக் பயன்படுத்துபவராக இருந்தால், அந்த வாடிக்கையாளர்களுக்கு வங்கி புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பாஸ்டேக் கட்டணம் அறிந்து கொள்வது உங்களுக்கு இதுவரை சிரமமாக இருந்தால் ஒரே ஒரு எஸ்எம்ஸ் மூலம் உங்களின் இருப்பை அறிந்து கொள்ளலாம்.  இது குறித்த அப்டேட்டை எஸ்பிஐ வங்கி டிவிட்டரில் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர் தனது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7208820019 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இதனை செய்தவுடன் SBI FASTag-ன் நிலுவைத் தொகை உங்கள் மொபைலுக்கு வந்துவிடும்.

எஸ்எம்எஸ் அனுப்புவது எப்படி?

* வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ்  சாட்டில் FTBAL என டைப் செய்ய வேண்டும்.
* அதன் பிறகு, இந்த செய்தியை எஸ்பிஐ பகிர்ந்துள்ள 7208820019 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
* மேலே குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு இந்த செய்தியை அனுப்பிய பிறகு சிறிது நேரம் காத்திருக்கவும்.
* இதற்குப் பிறகு, SBI FASTag இருப்பு பற்றிய செய்தி உங்கள் மொபைலில் பெறப்படும்.

பாஸ்டேக் வருகைக்குப் பின்னர் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் தொகை அதிகரித்துள்ளது. மேலும், நேரக்குறைவும் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு வசதியாக இருக்கிறது. 

மேலும் படிக்க | ரூ.200 விலைக்குள் தினமும் 2ஜிபி டேட்டா, பிஎஸ்என்எல் பெஸ்ட் பிளான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News