Samsung கொடுத்த அதிர்ச்சி: இந்த போனின் விலை உயர்ந்தது, காரணம் இதுதான்

அறிமுகப்படுத்தப்பட்ட 5 மாதங்களுக்குப் பிறகு, நிறுவனம் கேலக்ஸி ஏ 52 தொலைபேசியின் விலையை அதிகரித்துள்ளது. நீங்களும் இந்த போனை வாங்க திட்டமிட்டிருந்தால், புதிய போனின் விலையை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 3, 2021, 06:39 PM IST
  • சாம்சங் நிறுவனம், கேலக்ஸி ஏ 52-ஐ இந்தியாவில் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது.
  • சாம்சங் இந்தியாவில் கேலக்ஸி ஏ 52 விலையை அதிகரித்துள்ளது.
  • கேலக்ஸி ஏ 52, சாம்சங் 2021 இல் வெளியிட்ட சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும்.
Samsung கொடுத்த அதிர்ச்சி: இந்த போனின் விலை உயர்ந்தது, காரணம் இதுதான் title=

சாம்சங் நிறுவனம், கேலக்ஸி ஏ 52-ஐ இந்தியாவில் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த தொலைபேசி இரண்டு ஸ்டோரேஜ் கட்டமைப்புகள் மற்றும் நான்கு வண்ணங்களில் வருகிறது.

அறிமுகப்படுத்தப்பட்ட 5 மாதங்களுக்குப் பிறகு, நிறுவனம் இந்த தொலைபேசியின் விலையை அதிகரித்துள்ளது. நீங்களும் இந்த போனை வாங்க திட்டமிட்டிருந்தால், புதிய போனின் விலையை தெரிந்து கொள்ளுங்கள்.

சாம்சங் கேலக்ஸி A52: புதிய விலை

சாம்சங் (Samsung) இந்தியாவில் கேலக்ஸி ஏ 52 விலையை ரூ .1,000 அதிகரித்துள்ளது. கேலக்ஸி ஏ 52 எஸ் 5 ஜி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை தற்போது Samsung.com இல் லைவாக உள்ளது.

கேலக்ஸி ஏ 52 இன் பேஸ் வேரியண்ட் 6 ஜிபி + 128 ஜிபி-யின் விலை ரூ .26,499 மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி வேரியன்ட்டின் விலை ரூ .27,999 ஆகும். ஆனால் இப்போது நீங்கள் அதே போனை ரூ .27,499 மற்றும் ரூ .28,999 க்கு பெறுவீர்கள்.

விலை உயர்வுக்கு காரணம் என்ன?

கேலக்ஸி ஏ 52, சாம்சங் 2021 இல் வெளியிட்ட சிறந்த ஸ்மார்ட்போன்களில் (Smartphone) ஒன்றாகும். ஆனால் உலகளவில் நிலவும் செமி கண்டக்டர் குறைபாட்டால், இந்தியாவில் போன் கையிருப்பு இல்லாமல் போனது.

ALSO READ: Amazon அதிரடி சலுகை: Samsung Galaxy M32 5G-ல் ரூ. 2000 தள்ளுபடி

சாம்சங் கேலக்ஸி A52: விவரக்குறிப்புகள்

கேலக்ஸி A52-வில் 6.5 இன்ச் FHD+ Infinity-O Super AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் உள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி SoC ஆல் இயக்கப்படுகிறது. தொலைபேசியின் (Mobile Phone) பேட்டரி 4,500mAh ஆகும். இது 25W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

சாம்சங் கேலக்ஸி A52: கேமரா

இந்த போனில் பின்புறத்தில் 64MP (Wide, OIS) + 12MP (அல்ட்ரா-வைட்) + 5MP (மேக்ரோ) + 5MP (ஆழம்) குவாட் கேமரா அமைப்பு மற்றும் 32MP செல்ஃபி கேமரா உள்ளது. இது மூன்று ஆண்டுகளுக்கான ஓ.எஸ் அப்கிரேட் மற்றும் குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகளுக்கான பாதுகாப்பு அப்டேட்டுடன் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி A52: பிற அம்சங்கள்

தொலைபேசியின் மற்ற அம்சங்களில் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5 மிமீ ஹெட்போன் ஜேக், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், சாம்சங் பே மற்றும் தூசி/நீர் எதிர்ப்புக்கான IP67 ரேட்டிங் ஆகியவை அடங்கும்.

ALSO READ: Samsung ஜாக்பாட் சலுகை: Samsung Galaxy S20 FE 5G போனில் ரூ. 40,000 வரை தள்ளுபடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News