9 ஆயிரம் ரூபாய் போதும்.. New Honda Activa உங்க வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள்

Tech News: நாட்டில் அதிகம் விற்பனையாகும் ஹோண்டா ஆக்டிவாவின் பிரீமியம் பிரிவு ஸ்கூட்டரை வெறும் 9 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம். 60 கிமீ மைலேஜ் கிடைக்கும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 27, 2021, 04:49 PM IST
9 ஆயிரம் ரூபாய் போதும்.. New Honda Activa உங்க வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள் title=

Tech News: இரு சக்கர வாகனத் துறையில் ஸ்கூட்டர் நாளுக்கு நாள் விற்பனையை அதிகரித்து வருகிறது. இப்போது பைக் செக்மென்ட்டைப் போலவே அதிகம் விரும்பும் இரு சக்கர வாகனப்பிரிவில் ஸ்கூட்டரும் முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல மைலேஜ் கொண்ட பட்ஜெட் ஸ்கூட்டர்கள் முதல் ஸ்போர்ட் டிசைன்களுடன் கூடிய பிரீமியம் ஸ்கூட்டர்கள் வரை மவுசு கூடியுள்ளது. 

இதில் இன்று நாம் ஹோண்டா ஆக்டிவா 125 (Honda Activa 125) இன் சிறப்பு பற்றி பேசுவோம். இது நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் ஆகும்.

நீங்கள் ஹோண்டா ஆக்டிவாவை வாங்கினால், நீங்கள் ரூ 73,203 முதல் ரூ 82,280 வரை செலவழிக்க வேண்டும். ஆனால் உங்களுக்கு பட்ஜெட் கட்டுப்பாடுகள் இருந்தால், இந்த ஸ்கூட்டரை மிக எளிதான முறையில் முன்பணத்தை செலுத்தி வாங்குவதற்கான திட்டத்தின் முழு விவரங்களையும் இங்கே தெரிந்துக்கொள்ளலாம். 

BIKEDEKHO என்ற இரு சக்கர வாகனப் பிரிவு தகவல் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முன்பணம் மற்றும் இஎம்ஐ கால்குலேட்டரின் படி, டிஸ்க் பிரேக் கொண்ட ஹோண்டா ஆக்டிவாவின் பிரீமியம் எடிஷனை வாங்கினால், அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய வங்கி இதற்கு ரூ.85,546 வரை கடனாக வழங்கும்.

ALSO READ |  உங்க பட்ஜெட்டிலேயே சூப்பரான ப்ரீமியம் பைக்குகளை வாங்கலாம்: முழு விவரம் இதோ

இந்தக் கடனுக்குப் பிறகு, நீங்கள் குறைந்தபட்ச முன்பணமாக ரூ.9,505 செலுத்த வேண்டும், அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.3,050 மாதாந்திர இஎம்ஐ செலுத்த வேண்டும்.

இந்த ஸ்கூட்டரின் கடன் காலம் 36 மாதங்களாக வங்கியால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கடன் தொகைக்கு வங்கி ஆண்டுக்கு 9.7 சதவீதம் வட்டி வசூலிக்கும்.

நீங்கள் இந்த ஹோண்டா ஆக்டிவாவை வாங்க விரும்பினால், மேலே குறிப்பிட்டது போல முன்பணம் செலுத்தி வாங்கலாம். ஆனால் அதற்கு முன்பு, இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் மைலேஜ் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஹோண்டா ஆக்டிவா 125 இல், நிறுவனம் எரிபொருள் உட்செலுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட 124 சிசி எஞ்சினை வழங்கியுள்ளது, இந்த இன்ஜின் 8.29 பிஎஸ் ஆற்றலையும் 10.3 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. மேலும் இந்த ஸ்கூட்டரின் டிரான்ஸ்மிஷன் தானாகவே உள்ளது.

ALSO READ |  Eeve Soul: அட்டகாசமான அதிவேக மின்சார ஸ்கூட்டர் அறிமுகம், மிஸ் பண்ணிடாதீங்க!!

ஸ்கூட்டரின் பிரேக்கிங் அமைப்பைப் பற்றி பேசுகையில், நிறுவனம் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின் சக்கரத்தில் டிரம் பிரேக் ஆகியவற்றின் கலவையை வழங்கியுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 125 இன் மைலேஜைப் பொறுத்தவரை, இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தருவதாகவும், இந்த மைலேஜ் ARAI ஆல் சான்றளிக்கப்பட்டதாகவும் நிறுவனம் கூறுகிறது.

முக்கிய தகவல்: இந்த ஸ்கூட்டரில் கிடைக்கும் கடன், முன்பணம் மற்றும் வட்டி விகிதங்களுக்கான திட்டம் உங்கள் வங்கி மற்றும் CIBIL ஸ்கோரைப் பொறுத்தது, இதில் எதிர்மறையாக இருந்தால் வங்கி அதற்கு தகுந்தார் போல மாற்றிக்கொள்ளலாம் என்பதை நினைவில்கொள்ளுக.

ALSO READ | E-Ashwa: EV சந்தையில், மிகக்குறைந்த விலையில் அட்டகாசமாய் களமிறங்கும் ஸ்டைலிஷ் ஸ்கூட்டர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News