இன்று சந்திர கிரகணம் இந்தியாவில் காணலாம்

Last Updated : Aug 7, 2017, 10:45 AM IST
இன்று சந்திர கிரகணம் இந்தியாவில் காணலாம் title=

சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது. இதை இந்தியாவில் பார்க்க முடியும். இன்று இரவு தோன்றும் சந்திர கிரகணம் ஏறத்தாழ 2 மணி நேரம் நீடிக்கும்.

நிலவின் மீது படவேண்டிய சூரிய ஒளிக்கதிர்களை பூமி மறைத்துக் கொள்ளும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணம் இன்று நடக்கிறது. 

இதனை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும் காண முடியும் என கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்க இயக்குனர் கூறி உள்ளார்.

சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இரவு 10.52 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு 12.48 மணி வரை நீடிக்கும். முழு கிரகணம் 11.50  மணிக்கு ஏற்படும்.

Trending News