மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டர், ஈ-காமர்ஸ் பக்கங்களுடன் இணைக்கும் ட்வீட்களைக் காண்பிப்பதற்கான புதிய வழியை சோதித்து வருகிறது.
ஒரு புதிய ட்விட்டர் கார்டு வடிவமைப்பைக் கொண்டு, நிறுவனம் ஒரு பெரிய "ஷாப்" பொத்தானை உள்ளடக்கிய ட்வீட்களை பரிசோதித்து வருகிறது. மேலும், பொருட்களின் பெயர், கடையின் பெயர் மற்றும் விலை ஆகியவற்றை உள்ளடக்கிய பொருட்களின் விவரங்களை அந்த ட்வீட்டிலேயே நேரடியாக ஒருங்கிணைக்க ட்விட்டர் நிறுவனம் முயற்சிக்கிறது.
"சூப்பர் ஃபாலோ" சந்தாவிற்காக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுடன், ஒரு வடிவமைப்பாளர் தளமாக மாறுவதற்கான ட்விட்டரின் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வடிவமைப்பு செயல்படக்கூடும்.
செய்திமடல்கள், பிரத்தியேக உள்ளடக்கம், ஆதரவாளர் பேட்ஜ் மற்றும் பிற ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடிகள் போன்ற சந்தாதாரர்களுக்கு மட்டுமேயான சலுகைகளை பெற ஒரு குறிப்பிட்ட கணக்கைப் பின்பற்ற இந்த புதிய அம்சம் ட்விட்டர் பயனர்களை (Users) அனுமதிக்கும்.
ALSO READ: Twitter-க்கு மாற்றான Koo தளத்திற்கு இந்திய அமைச்சர்கள் மாறக் காரணம் என்ன..!!!
மக்களை ஷாப் செய்ய தூண்டும் அளவு போடப்படும் ட்வீட்கள் மூலம், நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் தங்கள் பயனர்களை தங்கள் பொருட்களை நோக்கி அழைத்துச் செல்லலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் (Twitter) கடந்த வாரம் தனது முதலீட்டாளர் தினத்தின்போது ஈ-காமர்ஸில் தான் எடுக்கவிருக்கும் எதிர்கால முதலீடுகளுக்கான நடவடிக்கைகளையும் திட்டங்களையும் பற்றி சுருக்கமாகத் தெரிவித்தது. எனினும், இது குறித்த விரிவான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
"ட்விட்டரில் வர்த்தகத்தை மேலும் சிறப்பாக ஆதரிப்பதற்கான வழிகளை நாங்கள் ஆராயத் தொடங்குகிறோம்" என்று ட்விட்டர் வருவாய் முன்னணி தலைவர், புரூஸ் பால்க் கூறினார்.
"பிராண்டுகளுடன் தொடர்புகொள்வதற்கும் தங்களுக்குப் பிடித்த தயாரிப்புகளைப் பற்றி விவாதிப்பதற்கும் மக்கள் ட்விட்டருக்கு வருவதை நாங்கள் அறிவோம். எங்கள் மேடையில் விற்பனையை செயல்படுத்த சில வணிகங்கள் ஏற்கனவே ஆக்கபூர்வமான வழிகளை வளர்த்துக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்" என்று அவர் விளக்கினார்.
ஃபால்கின் கூற்றுப்படி, இந்த கோரிக்கை, ஆர்வத்தில் இருக்கும் மற்றும் ஈடுபாட்டுடன் இருக்கும் பயனர்களுடன் தொடர்பை வளர்த்துக்கொள்ள உதவி அதன் விரிவாக்கத்திற்கான நம்பிக்கையை அளிக்கின்றது.
"ஒரு சில கிளிக்குகளில் உங்களுக்கு பிடித்தமான ஒரு பிராண்டிலிருந்து ஒரு புதிய தோல் பராமரிப்பு பிராடெக்ட் அல்லது நவநாகரீக ஸ்னீக்கரை எளிதில் கண்டுபித்து விரைவாக வாங்கவும் முடிந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்" என்று ஃபால்க் கூறினார்.
“ட்விட்டர் வர்த்தகத்தின் (E-Commerce) திறனைப் பற்றி உற்சாகமாக இருந்தாலும், இவை அனைத்துமே இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன” என்றும் அவர் அவர் முதலீட்டாளர்களை எச்சரித்தார்.
ALSO READ: இந்திய அரசாங்கத்தின் பொறுமையை சோதிக்கும் Twitter: உயர் அதிகாரிகள் கைது செய்யப்படலாம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR