மஹிந்திரா கார் வாங்கும் கனவு இருந்து, ஆனால், அதன் விலை காரணமாக வாங்க முடியாமல் போனவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. மிகக் குறைந்த விலையில் மகிந்திரா காரை ஓட்டுவதற்கான கனவு இப்போது நிஜமாகும்.
தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிக்க, மஹிந்திரா நிறுவனம் குயிக்லிஸ் என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இது வாகன குத்தகை மற்றும் சந்தாக்களுக்கான தளமாகும். இங்கு வாடிக்கையாளர்கள் மஹிந்திரா காரை எளிதாக வாடகைக்கு எடுக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த தளத்தின் மூலம், மஹிந்திரா ஆட்டோ போர்ட்டல் அல்லது டீலர்ஷிப்புக்கு சென்று, மஹிந்திரா காரை வாடகைக்கு எடுக்கலாம். இதற்கான முழு செயல்முறையையும் இந்த பதிவில் காணலாம்.
இந்த வசதி 8 நகரங்களில் கிடைக்கும்
தற்போது, மும்பை, புனே, டெல்லி, நொய்டா, குருகிராம், பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் மட்டுமே மஹிந்திரா இந்த வசதியை வழங்கியுள்ளது.
பயன்பாட்டிற்கு ஏற்ப பணம் செலுத்துங்கள்
மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் எம்.டி மற்றும் சிஇஓ விஜய் நக்ரா கூறுகையில், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப இந்த திட்டம் ‘பே பர் யூஸ்’ மாடலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார். இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
மேலும் படிக்க | கன்னாபின்னாவென விற்கும் எலக்ட்ரிக் வாகனங்கள்: மிரள வைக்கும் வளர்ச்சி
இந்த வகையில் பயன் கிடைக்கும்
லீசின் காலம் முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் தங்கள் காரைத் திரும்ப அளிக்கலாம். வாடிக்கையாளர்கள் அந்த காரை மீண்டும் லீசில் எடுக்கலாம் அல்லது மற்றொரு புதிய காரை தேர்ந்தெடுத்துக்கலாம். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான காரை 24 முதல் 60 மாதங்கள் வரை வாடகைக்கு எடுக்கலாம். இதைத் தவிர ஆண்டுக்கு 10,000 கிமீ வரையிலான திட்டங்களையும் தேர்வு செய்யலாம்.
மாதந்தோறும் இவ்வளவு வாடகை கொடுக்க வேண்டும்
நாம் தேர்ந்தெடுக்கும் மஹிந்திரா காருக்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு வாடகை செலுத்த வேண்டும்? மஹிந்திரா காரை குத்தகைக்கு எடுப்பதற்கான மாத வாடகை 21,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இருப்பினும், இதற்குப் பிறகு நீங்கள் பெட்ரோலைத் தவிர வேறு எதற்கும் செலவழிக்க வேண்டியதில்லை. அதாவது காப்பீடு, பராமரிப்பு மற்றும் சாலையோர உதவி அனைத்தும் நிறுவனத்தால் செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | பல்சர் பைக்குகளின் விலை கிடுகிடு உயர்வு! பஜாஜ் நிறுவனம் அதிரடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR