Whats App : மொபைல் எண்ணை சேமிக்காமல் மற்றொரு எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப 5 வழிகள்..!

WhatsApp Message Without Saving Numbers : நீங்கள் ஒரு நபருக்கு அவர்களின் மொபைல் எண்ணை சேமிக்காமல் WhatsApp மெசேஜ் அனுப்ப வேண்டுமா? இங்கே ஐந்து விதமான முறைகளைப் பயன்படுத்தி அதை எளிதாக செய்யலாம். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 25, 2024, 10:33 AM IST
  • வாட்ஸ்அப் இருக்கும் மெசேஜ் பிக் சீக்ரெட்
  • மொபைல் எண்ணை சேமிக்காமல் மெசேஜ் அனுப்பலாம்
  • பிரத்யேகமான 5 வழிமுறைகளை இங்கே தெரிந்து கொள்ளவும்
Whats App : மொபைல் எண்ணை சேமிக்காமல் மற்றொரு எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப 5 வழிகள்..! title=

WhatsApp இப்போது மற்றவர்களை தொடர்பு கொள்ளும் முக்கியமான மெசேஜிங் செயலியாக மாறிவிட்டது. இந்த செயலி மூலம், டெக்ஸ்ட் மெசேஜ்கள், வீடியோக்கள், புகைப்படங்கள், அல்லது ஆவணங்களை அனுப்பலாம். ஆனால், சில சமயங்களில் நீங்கள் ஒரு நபருக்கு அவரின் எண்ணை சேமிக்காமல் WhatsApp மெசேஜ் அனுப்ப முடியும். சாதாரணமாக, நீங்கள் மொபைல் எண்களை சேமிக்காமல் WhatsApp மெசேஜ் அனுப்ப முடியாது. ஆனால், நாம் உங்களுக்கு அது எப்படி முடியும் என்று ஐந்து வழிகளை இங்கே பார்க்கலாம்

1. WhatsApp செயலி மூலமாக எண் சேமிக்காமல் மெசேஜ் அனுப்புதல்

எளிதான வழிகளில் இதுவும் ஒன்று.
* உங்கள் Android அல்லது iOS சாதனத்தில் WhatsApp செயலியைத் திறக்கவும்.
* நீங்கள் மெசேஜ் அனுப்ப விரும்பும் எண்(நம்பரை)ஐ காபி செய்யவும்.
* New Chat பொத்தானை கிளிக் செய்து மெசேஜ் அனுப்ப விரும்பும் அந்த Mobile number ஐ text box இல் பேஸ்ட் செய்து உங்களுக்கே அனுப்பிக் கொள்ளவும்.
* இப்போது மெசேஜில் வந்திருக்கும் அந்த மொபைல் எண்ணை கிளிக் செய்தால் Chat with option ஐ காணலாம்.
* அதனை கிளிக் செய்து நீங்கள் மொபைல் எண்ணை சேமிக்காமல் அந்த எண்ணிற்கு WhatsApp மெசேஜ் அனுப்ப முடியும்.

மேலும் படிக்க | 'கல்லை சாப்பிடுங்கள்...' கூகுள் தேடலின் AI சொன்ன வினோத பதில் - வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

2. Browser மூலம் லிங்க் உருவாக்கி மெசேஜ் அனுப்புதல்

* உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப் பிரௌசரில் Open செய்யவும்.
* https://api.whatsapp.com/send?phone=xxxxxxxxxx என்ற லிங்கை காபி மற்றும் பேஸ்ட் செய்யவும்.
* xxxxxxxxxx என்ற இடத்தில் நீங்கள் மெசேஜ் அனுப்ப விரும்பும் எண் மற்றும் அதன் country code ஐ மாற்றவும். உதாரணமாக, எண் 9876543210 என்றால், லிங்க் http://wa.me/919876543210 ஆக இருக்க வேண்டும்.
* இப்போது Enter தட்டவும் மற்றும் Continue to Chat option ஐத் தட்டவும்.
* நீங்கள் அந்த நபரின் WhatsApp Chat இற்கு வழிமாறுவீர்கள். மொபைல் எண் சேமிக்காமல் மெசேஜ் அனுப்ப முடியும்.

3. Truecaller செயலி மூலம் WhatsApp மெசேஜ் அனுப்புதல்

Truecaller செயலியில் உள்ள WhatsApp பட்டனை பயன்படுத்தி எண் சேமிக்காமல் மெசேஜ் அனுப்பலாம்.
* உங்கள் Android அல்லது iOS சாதனத்தில் Truecaller செயலியைத் திறக்கவும்.
* அந்த செயலியில் நீங்கள் மெசேஜ் அனுப்ப விரும்பும் எண்னை தேடவும்.
* WhatsApp ஐகானை காண ஸ்க்ரோல் செய்யவும்.
* அதனைத் கிளிக் செய்தவுடனட், WhatsApp chat window திறக்கப்படும், மற்றும் நீங்கள் எண் சேமிக்காமல் அந்த நபருக்கு மெசேஜ் அனுப்ப முடியும்.

4. Google Assistant மூலமாக WhatsApp மெசேஜ் அனுப்புதல்

Google Assistant பயன்படுத்தி நீங்கள் எண் சேமிக்காமல் மெசேஜ் அனுப்பலாம்.

* உங்கள் ஸ்மார்ட்போனில் Google Assistant ஐ செயல்படுத்தவும்.
* “send a WhatsApp to” எனும் வாக்கியத்தை கூறி, அதன் பின்பு mobile number ஐ கூறவும். country code ஐ கூடவே சொல்ல வேண்டும்.
* உதாரணமாக, எண் 9876543210 என்றால், “send a WhatsApp to +919876543210” என்று கூற வேண்டும்.
* Assistant உங்களிடம் நீங்கள் அனுப்ப விரும்பும் text ஐ கேட்கும். அதை dictate செய்யவும்.
* முடிந்தவுடன், Google Assistant அந்த mobile number க்கு WhatsApp மெசேஜ் அனுப்பும்.

5. Apple Siri Shortcut மூலம் WhatsApp மெசேஜ் அனுப்புதல்

iPhone கொண்டிருந்தால், Siri Shortcuts பயன்படுத்தி எண் சேமிக்காமல் WhatsApp மெசேஜ் அனுப்பலாம்.
* உங்கள் iPhone இல் Siri Shortcuts செயலியை திறக்கவும்.
* Settings > Shortcuts சென்று Allow Untrusted Shortcuts ஐ இயக்கவும்.
* WhatsApp to Non-Contact shortcut ஐ browser இல் தேடவும் அல்லது இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
* Get Shortcut பட்டனை கிளிக் செய்து, அதை டவுன்லோடு செய்யவும்.
* Add Untrusted Shortcut என்பதைத் கிளிக் செய்யவும்.
* Shortcuts செயலியை திறந்து WhatsApp to Non-Contact shortcut ஐ ஸ்க்ரோல் செய்து அதனை இயக்கவும். அல்லது, Home screen இல் சேர்க்கவும்.
* Mobile number ஐ உள்ளீடு செய்யவும், WhatsApp இல் புதிய chat window க்கு வழிமாறுவீர்கள். இப்போது மெசேஜ் அனுப்பலாம்.

மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியா வைத்துள்ள சொகுசு கார்கள் - அவற்றின் மதிப்பு என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News