கண்னை கவரும் அழகிய வடிவமைப்பில் வருகிறது Vivo மொபைல்கள்!

அழகிய வடிவத்திற்கு பெயர் போன Vivo மொபைல்கள், தங்களது அடுத்தப் படைப்புகளான NEX S மற்றும் NEX A-வினை அறிமுகம் செய்துள்ளது!

Updated: Jun 13, 2018, 04:17 PM IST
கண்னை கவரும் அழகிய வடிவமைப்பில் வருகிறது Vivo மொபைல்கள்!

அழகிய வடிவத்திற்கு பெயர் போன Vivo மொபைல்கள், தங்களது அடுத்தப் படைப்புகளான NEX S மற்றும் NEX A-வினை அறிமுகம் செய்துள்ளது!

கண்ணை கவரும் வகையில் அற்புதமான வடிவத்தில் வெளியாகியுள்ள இந்த இரண்டு மொபைல்களும் ஒத்த வடிவமைப்பினை கொண்டிருக்கும் போதிலும், சிறப்பம்சங்களில் ஒரு சில ஒற்றுமைகள் காணப்படுகின்றன.

NEX S மற்றும் NEX A ஆகிய இரண்டு மொபைல்களும் தங்களது திரையளவில் 91.24% திரையினை செல்பி எடுக்க ஏதுவாக பெரும்திரையாகவே கொண்டுள்ளது. இரண்டு மொபைல்களும் UFD அம்சத்தினை கொண்ட 6.59" தொடுதிரைகளை கொண்டுள்ளது. மேலும் 2316 x 1080 pixels திரையளவு மற்றும் 19.3:9 கொள்ளலவினை கொண்டுள்ளது.

முன்பு வெளியாகியிருக்கம் Vivo  மொபைல்களின் பதிப்புகளை காட்டிலும் NEX S மற்றும் NEX A ஆகிய மொபைல்களில் 50% மேம்படுத்தப்பட்ட கைரேகை படிப்பான் திறன் புகுத்தப்பட்டுள்ளது. மேலும் 2.2GHz octa-core Snapdragon 845 SoC திறன் கொண்ட செயல்திறன், 8GB RAM மற்றும் 256GB சேமிப்பு திறன் என பல சிறப்பம்சங்களுடன் வெளியாகிறது.

NEX S சிறப்பம்சங்கள்...

  • Android 8.1 Oreo இயக்கமுறை.
  • Snapdragon 845 processor
  • 12MP பின் கேமிரா, 5MP முன்கேமிரா.
  • 4000mAh பேட்டரி.
  • 4G LTE, dual-band Wi-Fi, Bluetooth 5.0, USB 2.0 port

NEX A சிறப்பம்சங்கள்...

  • Android 8.1 Oreo இயக்கமுறை.
  • Snapdragon 845 processor
  • 12MP பின் கேமிரா, 5MP முன்கேமிரா.
  • 4000mAh பேட்டரி.
  • 4G LTE, dual-band Wi-Fi, Bluetooth 5.0, USB 2.0 port

விலையினை பொருத்தவரையில் NEX S ஆனது 4498 யுயான் (இந்திய மதிப்பில் 47300 ரூபாய்) மற்றும் NEX A ஆனது 3898 யுயான் (இந்திய மதிப்பில் 41000 ரூபாய்) என மதிப்பிடப்பட்டுள்ளது!