WhatsApp! ரீசார்ஜ் செய்யாமல் அன்லிமிடெட் காலிங் செய்ய முடியும்.. வருகிறது புதிய வசதி!

WhatsApp Shortcut Calling: பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை திறக்காமலேயே அழைப்புகளை மேற்கொள்ள முடியும். அதாவது, காலிங் செய்வதற்காக பயனர்கள் உடனடி வாட்ஸ்அப் ஷார்ட்கட் அழைப்பு உருவாக்க முடியும்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 2, 2023, 07:31 PM IST
  • வாட்ஸ்அப் மூலம் காலிங் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  • உடனடி மெசேஜ் அனுப்புவது போல் உடனடி காலிங் செய்யலாம்.
  • இந்தியாவில் தடைசெய்யப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளில் 13.89 லட்சம்.
WhatsApp! ரீசார்ஜ் செய்யாமல் அன்லிமிடெட் காலிங் செய்ய முடியும்.. வருகிறது புதிய வசதி!  title=

WhatsApp Feature: வாட்ஸ்அப் நிறுவனம் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இது வாட்ஸ்அப் அழைப்பை எளிதாக்கும். புதிய ஷார்ட்கட் அழைப்பு வசதி பயனர்களுக்கு வாட்ஸ்அப் காலிங் மேற்கொள்வதை இன்னும் சிறப்பானதாக மாற்றும். நீங்கள் அடிக்கடி வாட்ஸ்அப் காலிங் செய்கிறீர்கள் என்றால், வரவிருக்கும் அம்சம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கடந்த சில மாதங்களாகவே வாட்ஸ்அப் மூலம் காலிங் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் வாட்ஸ்அப் மூலம் மேற்கொள்ளும் அழைப்புகளை ரெகார்ட் செய்ய முடியாது என்பது தான். இத்தகைய சூழ்நிலையில், வாட்ஸ்அப் காலிங் அம்சங்களை வசதியாக மாற்றும் வகையில் புதிய வாட்ஸ்அப் ஷார்ட்கட் அழைப்பு (WhatsApp Shortcut Calling) வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்துகிறது.

விரைவில் வாட்ஸ்அப் ஷார்ட்கட் அழைப்பு வசதி
இந்த புதிய அழைப்பு அம்சம் மூலம் பயனர்கள் எளிதாக காண்டாக்ட் நம்பர் லிஸ்ட் பட்டியலை அணுகலாம். பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை திறக்காமலேயே அழைப்புகளை மேற்கொள்ள முடியும். அதாவது, காலிங் செய்வதற்காக பயனர்கள் உடனடி வாட்ஸ்அப் ஷார்ட்கட் அழைப்பு உருவாக்க முடியும். இந்த வாட்ஸ்அப் ஷார்ட்கட் காலிங் என்பது, நீங்கள் யாருடன் அதிகம் பேசுகிறீர்களோ அந்த பயனர்களுக்காக இருக்கும். அதாவது இந்த புதிய அப்டேட் வந்தபிறகு, உடனடி மெசேஜ் அனுப்புவது போல் காலிங் செய்வதும் எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: 2023 முதல் இந்த மொபைல்களில் வாட்ஸ் அப் இயங்காது! இந்த பட்டியலில் உங்கள் மொபைலும் உள்ளதா?

WABetaInfo இன் அறிக்கையின்படி, புதிய ஷார்ட்கட் காலிங் அம்சம் வாட்ஸ்அப் செயலியுடன் ஒருங்கிணைக்கப்படும். இந்த அம்சத்தின் உதவியுடன், பயனர்கள் ஒரேஒருமுறை டேப் செய்து அழைப்புகளைச் செய்ய முடியும். அதேநேரத்தில் காண்டாக்ட் நம்பர் பட்டியலையும் அணுக முடியும். நல்ல விஷயம் என்னவென்றால், அடிக்கடி அழைக்கப்படும் தொடர்புகளை தனியாக ஷார்ட்கட் அமைக்க உதவியாக இருக்கும்.

பீட்டா பதிப்பில் சோதனை
வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் மேம்பாட்டை மேம்படுத்தும் வகையில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. வாட்ஸ்அப் எந்தவொரு அம்சத்தையும் அறிமுகம் செய்வதற்கு அதை பீட்டா பதிப்பில் சோதனை செய்வது வழக்கம், இந்த அப்டேட் கூகுள் ப்ளே ஸ்டோர் பீட்டா புரோகிராம் மூலம் வெளியிடப்படும். வாட்ஸ்அப்பின் 2.23.3.15 பதிப்பு அப்டேட்டில் அழைப்பு அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது நிறுவனம் பல்வேறு புது அம்சங்களை பீட்டா பதிப்பில் சோதனை செய்து வருகிறது. அதில் வாட்ஸ்அப் ஷார்ட்கட் அழைப்பு அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அம்சங்கள் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

மேலும் படிக்க: வாட்ஸ்அப் சாட் கொண்டு வரும் புதிய அம்சம்! தொந்தரவு நபர்களை இப்படி பிளாக் செய்யலாம்

தடைசெய்யப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளில் எண்ணிக்கை
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளில் 13.89 லட்சம் கணக்குகள் அடங்கும். "டிசம்பர் 1, 2022 மற்றும் 31 டிசம்பர் 2022 இடையே, 3,677,000 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டன. இவற்றில் 1,389,000 கணக்குகள் பயனர்களிடமிருந்து எந்த அறிக்கையும் வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை செய்யப்பட்டன" என்று வாட்ஸ்அப் தனது டிசம்பருக்கான இந்திய மாதாந்திர அறிக்கையில் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் கீழ் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தவறான வாட்ஸ்அப் கணக்குகள் குறித்து அறிக்கை
கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த கடுமையான IT விதிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் இணக்க அறிக்கைகளை வெளியிட வேண்டும் என மத்திய அரசு கூறியதை அடுத்து, தவறான வாட்ஸ்அப் கணக்குகள் குறித்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் அந்த கணக்குகள் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களை தெரிவிக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ChatGPT: சாட்ஜிபிடி ஓரிரு ஆண்டுகளில் கூகுளை காலி செய்யும்: எச்சரிக்கும் ஜிமெயில் நிறுவனர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News