புதிய தொடக்கமான 2023ம் ஆண்டில் பல விதமான சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் வரவுள்ளன, இந்த காலத்தில் பலரும் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை விடுத்தது புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். அப்படி புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குவார்கள் கொஞ்சம் கவனமுடன் செயல்பட வேண்டும். ஏனெனில் மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியானது டிசம்பர் 2022-ம் ஆண்டுக்கு பிறகு சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் சில ஐபோன்களில் வேலை செய்வதை நிறுத்தப்போகிறது. தற்போது வெளியாகியுள்ள அறிக்கைகளின்படி, சாம்சங், ஆப்பிள் போன்ற பல பிராண்டுகளை சேர்த்து கிட்டத்தட்ட 49 ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனம் டிசம்பர் 31-ம் தேதி முதல் அந்த குறிப்பிட்ட பிராண்டு ஸ்மார்ட்போன்களில் தனது அப்டேட்டை வெளியிடாது.
மேலும் படிக்க | Flipkart starts Year End Sale: இவ்வளவு கம்மி விலைகளில் ஸ்மார்ட்போன்களா?
வாட்ஸ்அப் செயல்படாமல் போகப்போகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்:
1) ஐபோன் 5
2) ஐபோன் 5சி
3) ஆர்க்கோஸ் 53 பிளாட்டினம்
4) கிராண்ட் எஸ் ஃப்ளெக்ஸ் ZTE
5) கிராண்ட் எக்ஸ் குவாட் V987 ZTE
6) ஹெச்டிசி டிசையர் 500
7) ஹவாய் அஸெண்ட் D
8) ஹவாய் அஸெண்ட் D1
9)ஹவாய் அஸெண்ட் D2
10) ஹவாய் அஸெண்ட் G740
11) ஹவாய் அஸெண்ட் மேட்
12) ஹவாய் அஸெண்ட் P1
13) குவாட் எக்ஸ்எல்
14) லெனோவா ஏ820
15) எல்ஜி எனாக்ட்
16) எல்ஜி லூசிட் 2
17) எல்ஜி ஆப்டிமஸ் 4X ஹெச்டி
18) எல்ஜி ஆப்டிமஸ் எஃப்3
19) எல்ஜி ஆப்டிமஸ் F3Q
20) எல்ஜி ஆப்டிமஸ் எஃப்5
21) எல்ஜி ஆப்டிமஸ் எஃப்6
22) எல்ஜி ஆப்டிமஸ் எஃப்7
23) எல்ஜி ஆப்டிமஸ் எல்2 II
24) எல்ஜி ஆப்டிமஸ் எல்3 II
25) எல்ஜி ஆப்டிமஸ் L3 II Dual
26) எல்ஜி ஆப்டிமஸ் L4 II
27) எல்ஜி ஆப்டிமஸ் L4 II Dual
28) எல்ஜி ஆப்டிமஸ் எல்5
29) எல்ஜி ஆப்டிமஸ் எல்5 டூயல்
30) எல்ஜி ஆப்டிமஸ் L5 II
31) எல்ஜி ஆப்டிமஸ் எல்7
32) எல்ஜி ஆப்டிமஸ் எல்7 II
33) எல்ஜி ஆப்டிமஸ் L7 II Dual
34) எல்ஜி ஆப்டிமஸ் நைட்ரோ எச்டி
35) மெமோ ZTE V956
36) சாம்சங் கேலக்ஸி ஏஸ் 2
38) சாம்சங் கேலக்ஸி கோர்
39) சாம்சங் கேலக்ஸி S2
40) சாம்சங் கேலக்ஸி S3 மினி
41) சாம்சங் கேலக்ஸி ட்ரெண்ட் II
42) சாம்சங் கேலக்ஸி ட்ரெண்ட் Lite
43) சாம்சங் கேலக்ஸி X கவர் 2
44) சோனி எக்ஸ்பீரியா ஆர்க் எஸ்
45) சோனி எக்ஸ்பீரியா மிரோ
46) சோனி எக்ஸ்பீரியா நியோ எல்
47) விக்கோ சின்க் ஃபைவ்
48) விகோ டார்க்நைட் ZT
இதுதவிர வாட்ஸ்அப் புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது, டெஸ்க்டாப் பீட்டாவில் ஸ்டேட்டஸ் அப்டேட்டிற்கு புகாரளிக்கும் வசதியை பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த புகாரளிப்பதற்கான ஆப்ஷன் மெனுவில் புதிதாக சேர்க்கப்படுவதாக வாபீட்டாஇன்ஃபோ தெரிவித்துள்ளது. ஸ்டேட்டஸ்கள் விதிமுறைகளை மீறுவதாக தெரிந்தால் பயனர்கள் அதற்கு புகாரளிக்கலாம் மற்றும் இதனால் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனில் பாதிப்பு ஏற்படாது.
மேலும் படிக்க | இனி வீட்டில் இந்த அளவிற்கு மேல் தங்க நகைகள் வைத்திருக்க முடியாது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ