உலகின் Cheapest Electric car Strom R3: அசத்தல் தோற்றம், அபாரமான அம்சங்கள்

மும்பையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்ட்ரோம் மோட்டார்ஸ்  இந்த காரை தயாரித்துள்ளது. இது 3 சக்கரங்களைக் கொண்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 28, 2021, 04:41 PM IST
  • சாதாரண முச்சக்கர வண்டியைப் போலல்லாமல், அதன் தோற்றம் மிகவும் தனித்துவமானதாக உள்ளது.
  • ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 200 கிமீ தூரம் வரை பயணிக்கும்.
  • முதல் மூன்று ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ வரையிலான உத்தரவாதம்.
உலகின் Cheapest Electric car Strom R3: அசத்தல் தோற்றம், அபாரமான அம்சங்கள் title=

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை காரணமாக பலர் மின்சார வாகனங்கள் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர். நீங்களும் மின்சார காரை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அட்டகாசமான ஒரு மின்சார காரைப் (Electric Car) பற்றி இந்த பதிவில் காணலாம். மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் இந்த காரின் அம்சங்களும் அசத்தலாக உள்ளன.

உலகின் மலிவான மின்சார கார் என கூறுகிறது நிறுவனம்

மும்பையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் (Strom Motors) இந்த காரை தயாரித்துள்ளது. இது 3 சக்கரங்களைக் கொண்டுள்ளது. ஆனால், சாதாரண முச்சக்கர வண்டியைப் போலல்லாமல், அதன் தோற்றம் மிகவும் தனித்துவமானதாக உள்ளது. இதுமட்டுமல்லாமல், இது உலகிலேயே மலிவான மின்சார கார் என்று நிறுவனம் கூறுகிறது.

2022-க்குள் டெலிவரி கிடைக்கும்

ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் இந்த காருக்கு ஸ்ட்ரோம் ஆர்3 (Strom R3) என்று பெயரிட்டுள்ளது. நீங்கள் இந்த காரை வாங்க விரும்பினால், இதை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்ய, ரூ. 10,000 ரூபாய் செலுத்த வேண்டும். நிறுவனம் முதலில் இந்த மின்சார காரை மும்பை மற்றும் டெல்லி-என்சிஆர் சாலைகளில் அறிமுகப்படுத்த விரும்புகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு அதாவது 2022-ம் ஆண்டுக்குள் டெலிவரி செய்யப்படும் என்று நிறுவனம் கூறுகிறது.

ALSO READ:  Humble One: சூரிய ஒளியால் சார்ஜ் ஆகும் மின்சார கார்கள்!! 

தோற்றம் மிகவும் தனித்துவமானதாக உள்ளது

நாம் பொதுவாக பல முச்சக்கர வண்டிகளைப் பார்த்திருப்போம். ஆனால் ஸ்ட்ரோம் ஆர்3 சாதாரண மூன்று சக்கர வாகனம் போல் இல்லை. சாதாரண வாகனத்தில் மூன்று சக்கர வாகனங்களில் முன்புறத்தில் ஒரு சக்கரமும், பின்பக்கத்தில் இரண்டு சக்கரமும் இருக்கும். ஆனால் இந்த காரில் அது மாறுபட்டு உள்ளது.

அதாவது, ஸ்ட்ரோம் ஆர்3 காரில் முன்பக்கம் 2 சக்கரங்களும் பின்பக்கம் நடுவில் ஒரு சக்கரமும் உள்ளன. இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 200 கிமீ தூரம் வரை பயணிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தவிர, ஸ்ட்ரோம் R3-யில் 4G இணைக்கப்பட்ட கண்டறியும் இஞ்சினும் (4G Connected Diagnostic Engine) உள்ளது. இது டிரைவருக்கு டிராக் லொகேஷன் மற்றும் சார்ஜ் நிலையைப் பற்றி கூறுகிறது. இந்த காரில் சன்ரூஃப்பும் உள்ளது.

இந்த வழியில் முன்பதிவு செய்யலாம்

ஸ்ட்ரோம் ஆர்3 காரின் விலை ரூ.4.5 லட்சம் ஆகும். வேகத்தைப் பற்றி பேசினால், இந்த கார் (Car) அதிகபட்சமாக மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த காரை வாங்கினால், முதல் மூன்று ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ வரையிலான உத்தரவாதம் கிடைக்கும். இது காலநிலை கட்டுப்பாட்டு காற்றுச்சீரமைப்பையும் (Climate Control Air Conditioner) கொண்டுள்ளது. நீங்கள் Strom R3 ஐ வாங்க விரும்பினால், Strom Motors இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.strommotors.com/ -க்கு சென்று முன்பதிவு செய்யலாம்.

ALSO READ: மின்சார வாகன துறையில் நுழைந்தது Apple: சாலைகளை கலக்க வருகிறது Apple Car 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News