சியோமியின் MIUI 9 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் சார்ந்து இயங்கும் புதிய இண்டர்ஃபேஸ் பல்வேறு புதிய வசதிகளை வழங்குகிறது.
இந்த MIUI 9 போனில் இமேஜ் சர்ச், ஸ்மார்ட் அசிஸ்டண்ட் மற்றும் ஸ்மார்ட் ஆப் லான்ச்சர் என மூன்று முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த MIUI 9 போன் முதற்கட்டமாக சீனாவில் ஆகஸ்டு 11-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சர்வதேச வெளியீடு குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
MIUI 9 அம்சங்கள்:
> புதிய MIUI 9 போனில் செயலிகள் மிகவேகமாக இயங்கும், புதிய வடிவமைப்பு அம்சங்கள், லாக் ஸ்கிரீனில் ஷார்ட்கட்கள், ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சம், ஸ்மார்ட் ஃபன்ஷனாலிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
> புதிய MIUI 9 சிஸ்டம் இயக்கத்தை ஆப்டிமைஸ் செய்து செயலிகளை முன்பை விட வேகமாக இயக்கும். மற்றொரு அம்சமான இமேஜ் சர்ச், முக்கிய குறியீடுகளை டைப் செய்து புகைப்படங்களை தேட வழி செய்கிறது.
> ஹோம் ஸ்கிரீனில் வலது புறத்தில் ஸ்வைப் செய்தால் செயலி, செய்திகள் மற்றும் கஸ்டமைஸ் செய்யக் கூடிய விட்ஜெட் உள்ளிட்டவற்றை இயக்க முடியும்.
> ஸ்மார்ட் அசிஸ்டண்ட் அம்சம் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து தரவுகளையும் மிக எளிமையாக தேட வழி செய்கிறது.
> ஸ்மார்ட் லான்ச்சர் அம்சம் திரையில் உள்ள தரவுகளுக்கு ஏற்ப செயலிகள் இயங்க பரிந்துரை செய்யும்.
புதிய இன்டர்ஃபேஸ் அம்சங்கள் சீனாவில் மட்டும் வேலை செய்யும் என்றும் சர்வதேச சந்தையில் வழங்கப்படும் என சியோமி தெரிவித்துள்ளது.
புதிய கஸ்டம் இயங்குதளத்தில் மூன்று புதிய தீம்களும் வழங்கப்பட்டுள்ளது.