18:19 22-05-2018
தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 10 பேரை போலீஸ் சுட்டுக் கொன்றதால் தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.
தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் எண்னிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. மேட்டுப்பட்டி கிளாஸ்ட்ன (40), தூத்துக்குடி ந்தையா (55), குறுக்குசாலை கிராமம் தமிழரசன்(28), ஆசிரியர் காலனி சண்முகம் (40), தாமோதர் நகர் மணிராஜ் ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர். மற்ற 3 பேரின் அடையாளம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி இன்று 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தங்கள் உரிமைக்காகவும், தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி அமைதி பேரணியாக பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். அப்பொழுது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீஸ் மற்றும் பொது மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அது கலவரமாக மாறி போலீசார் தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்கள் வீசினர். போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட கலவரத்தில் வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்த போராட்ட கும்பல் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள்.
#WATCH Protest held in Tuticorin demanding ban on Sterlite Industries, in wake of the pollution created by them #TamilNadu pic.twitter.com/23FWdj1do5
— ANI (@ANI) May 22, 2018
இதையடுத்து, போலீசார் நடத்திய தூப்பாக்கி சூட்டில், இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் மேலும் எத்தனை பேர் உயிரிழந்தனர், எத்தனை பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
தமிழ் நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் இது போன்ற துப்பாக்கிச் சூடு நடந்தது இல்லை, ஒரே நாளில் 11 பேர் போலீஸ் சுட்டுக் கொன்றதால் தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. அதுமட்டும்மல்லாமல் போலீசாரால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அப்பாவிகள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கல்வீச்சில் 20 போலீஸ் உள்பட 65 பேர் காயமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.