கவுகாத்தில் இருந்து மத்திய கந்தாவிற்கு 45 பயணிகளுடன் பயணித்த படகு எதிர்பாரதா விதமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி உள்ளது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்ஆர்சி விவகாரம் நாட்டின் முக்கிய பிரச்சனை ஆகும். 40 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருப்பது பாஜகவின் சுயநலத்தை காட்டுகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
அஸ்ஸாம் மாநில பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ரத்னேஸ்வர் மோரனின் மகன், குல்தீப் மோரன் என்பவரை கடந்த 1-ம் தேதி, அருணாச்சலப் பிரதேசத்தின் சங்லாங் பகுதியில் உல்ஃபா அமைப்பினர் கடத்திச் சென்றனர்.
இந்நிலையில், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றால் 1 கோடி ரூபாய் தர வேண்டும் எனவும், பணம் தராவிட்டால், குல்தீப்பை சுட்டுக் கொன்று விடுவோம் எனவும் உல்ஃபா அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
அசாமில் பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 100 கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன. கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக சுமார் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 88,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் 6 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான விளை நிலங்கள்
நீரில் மூழ்கி உள்ளன. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள லகிம்பூர் மாவட்டத்தில் மட்டும் 7 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.