அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் இந்த 'அக்னி-4' ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடந்தது.
இந்தியா 1.5 டன் எடையை சுமந்துச் செல்லக்கூடிய வகையில் 17 மீட்டர் நீளம் கொண்ட 'அக்னி-4' ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் இந்த 'அக்னி-4' ஏவுகணைகள் சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை, கண்டம்விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இதனை இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது.
ஒடிசா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதியில் அசத்திய குஜராத் வீரர் சமித், 359 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், முதல் தர கிரிக்கெட்டில் துவக்க வீரராக களமிறங்கி அதிக ரன்கள் குவித்து, கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தவர் என்ற உலக சாதனை படைத்தார்.
ஒடிசாவின் கலாஹன்டி மாவட்டத்தைச் சேர்ந்த தானா மஜ்கி என்பவரின் மனைவி காசநோயால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இவர் ஆகஸ்ட் 23-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் மனைவியின் உடலை 60 கி.மீ., தொலைவில் இருக்கும் தனது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் உதவி கேட்டுள்ளார் மஜ்கி. அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை.
ஒடிசாவில் சுதந்திர தின விழா அணிவகுப்பில் முதன் முறையாக திருநங்கைகள் பாரம்பரிய உடையில் பங்கேற்க உள்ளனர்.
சுதந்திர தின விழா வரும் 15-ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.