தமிழ்நாட்டை சேர்ந்த பாலிவுட் பிரபல நடிகை வித்யா பாலனின் கார் மீது மற்றொரு கார் மோதியது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
மும்பையில் உள்ள ஒரு சாலையில் தனது காரில் பயணம் செய்துக்கொண்டு இருக்கும் போது, திடிரென எதிர் புறமாக வந்த மற்றொரு கார், அவரது கார் மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக அவர் எந்தவித காயம் இன்றி உயிர் தப்பினார். ஆனால் அவரது கார் மிகுந்த சேதமடைந்துள்ளது.
சென்னை-28, கோவா, உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஜெய் மற்றும் பிரேம்ஜி அடையாறு பாலம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது தடுப்புச்சுவரில் மோதி அவரது வாகனம் விபத்துக்குள்ளாகியாது
ஜெய் மற்றும் பிரேம்ஜி குடிபோதையில் வாகனம் ஓட்டி சென்றுள்ளார் என்று தெரியவந்துள்ளன. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர் குடித்து விட்டு காரை ஓட்டிச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த விசாரித்த போலீசார், குடிபோதையில் வாகனம் ஓட்டியது உள்பட 3 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கார் ஒன்று ஆற்றில் கவிழ்ந்த விபத்து உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர்.
மதுரா பகுதியில் இன்று அதிகாலை விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் பரேய்லி பகுதியைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காரினுள், அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததோடு, இரவு நேரம் என்பதால் கட்டுப்பாட்டை இழந்து, ஆற்றினுள் கவிழ்ந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
நீரில் மூழ்கிய காரையும், 9 பேரின் சடலங்களையும் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா பிரதேஷ மாநிலத்தின் அமைச்சர் நாராயணாவின் மகன் நிஷிடா இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஜூப்லி மலைப்பகுதியில் நண்பர் ராஜாவிடம் நிஷிடம் சென்ற கார் சாலையோரத்தில் இருந்த மெட்ரோ ரயில் பாலத்தின் தூண் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அமைச்சர் நாராயணாவின் மகன் நிஷிடா மற்றும் அவரது நண்பர் ராஜாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டக்கல்லூரி மாணவர் போதையில் காரை ஓட்டி விபத்து. ஆட்டோ டிரைவர் பலியானார்.
சென்னையில் உள்ள கதீட்ரல் சாலையில் ஆட்டோவில் டிரைவர் துாங்கிக் கொண்டு இருந்தனர். போதையில் அந்த வழியாக காரை ஓட்டி வந்த சட்டக் கல்லுாரி மாணவர் விகாஸ் விஜயானந்த் (வயது22) ஆட்டோக்கள் மீது மோதினார். அவரது கார் மோதியதில் ஆறுமுகம் என்ற ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 12 ஆட்டோக்கள் சேதமடைந்தன. விகாஸ் ஓட்டி வந்த காரும் சேதமடைந்தது. சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் டிரைவர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அவர்களில் 9 பேர் காயம் அடைந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.