Gautam Gambhir, Rohit Sharma | இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை அதாவது ஜனவரி 3 ஆம் தேதி முதல் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சிட்னி டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாடுவார? என எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை. அதனால், கேப்டன் ரோகித் சர்மா சிட்னி டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது சந்தேகம் என தெரிகிறது.
கவுதம் கம்பீர் பேட்டி
சிட்னி டெஸ்ட் போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கலந்து கொண்டார். ஒரு டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஒரு அணியின் கேப்டன் தான் செய்தியாளர்களை சந்திப்பர். பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் போட்டியிலும் இதே அணுகுமுறை தான் இருந்தது. முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டன் தான் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். ஆனால் சிட்னியில் நடக்கும் 5வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதிலாக கவுதம் கம்பீர் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அவர் பல்வேறு கேள்விக்கு பதிலளித்த நிலையில், ரோகித் சர்மா விளையாடுவாரா? என்ற கேள்விக்கு போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் பிளேயிங் லெவன் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். அதாவது, ரோகித் சர்மா விளையாடுவார் என நேரடியாக எந்த பதிலையும் கொடுக்கவில்லை.
மேலும் படிக்க | இந்திய அணிக்குள் பெரும் பஞ்சாயத்து... டிரெஸ்ஸிங் ரூம் தகவல்களை வெளியே சொல்வது யார்?
ரோஹித் சர்மா சிட்னி டெஸ்டில் விலகல்
இதனால், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாடுவது குறித்து இன்னும் சஸ்பென்ஸ் உள்ளது. சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் போடும்போது தான் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடுவாரா என்பது தெரியவரும். பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசும்போது, 'ரோஹித் சர்மா குறித்து எந்த குழப்பமும் இல்லை. எல்லாம் நன்றாக இருக்கிறது, பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இல்லாதது விவாதத்திற்குரிய விஷயமாக நான் நினைக்கவில்லை. தலைமை பயிற்சியாளராக நான் இங்கே இருக்கிறேன். நாளை விக்கெட்டைப் பார்த்து, பிளேயிங் லெவனை தேர்ந்தெடுப்போம்."என கூறினார்.
கவுதம் கம்பீர் எச்சரிக்கை
தொடர்ந்து பேசிய கவுதம் கம்பீர், டிரஸ்ஸிங் ரூம் விவாதங்களை பகிரங்கப்படுத்தக்கூடாது, அணிக்கு என்ன தேவை என்பதை வீரர்களிடம் நேர்மையாக பேசுகிறேன் என்று கூறினார். டிரஸ்ஸிங் ரூமில் பதற்றம் நிலவுகிறது என்ற செய்திகளுக்கு பதிலளித்த கம்பீர், அவை வெறும் அறிக்கைகள், உண்மை இல்லை என்று விளக்கம் அளித்தார். மேலும், பயிற்சியாளருக்கும் வீரருக்கும் இடையிலான விவாதம் டிரஸ்ஸிங் அறையில் மட்டுமே இருக்க வேண்டும். அவை பொதுவெளிக்கு வரக்கூடாது என்றும் கடும் கோபத்துடன் தெரிவித்தார்.
இந்திய அணி பிளேயர்களுக்கு அறிவுறுத்தல்
"நேர்மையானவர்கள் டிரஸ்ஸிங் ரூமில் இருக்கும் வரை, இந்திய கிரிக்கெட் பாதுகாப்பான கரங்களில் உள்ளது என அர்த்தம். ஒவ்வொரு வீரருக்கும் தான் எங்கு முன்னேற வேண்டும் என்பது தெரியும். டெஸ்ட் போட்டிகளை எப்படி வெல்வது என்பதுதான் சொல்லி கொடுக்க முடியும். விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வியூகம் பற்றி எதுவும் பேசவில்லை" என்றும் கெளதம் கம்பீர் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ