எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து வேலைநிறுத்தம் தொடரும் என எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
டெண்டர் விதிமுறையை கண்டித்து எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது.இதனால் சமையல் எரிவாயு தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 32 வரை அதிகம் செலவிட வேண்டியிருக்கும்.
காஸ் சிலிண்டர் 5% ஜிஎஸ்டி வரம்பில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டெல்லி போன்ற பெரும்பாலான மாநிலங்களில் கிரீன் எரிபொருளுக்கு வரி விதிக்கவில்லை, சில மாநிலங்களில் வாட் 2% முதல் 4% என்ற அளவில் இருந்தது.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியபின் எல்பிஜி சிலிண்டரின் விலையும் எரிபொருளுக்கு வரி விதிக்காத மாநிலங்களில் 12-15 ரூபாய் அதிகரிக்கும்.
இந்த விலை உயர்வால் மானிய விலையிலான 14.2 கிலோ சிலிண்டர் டெல்லியில் ரூ.425.06 இருக்கும். இதற்கு முன்பு ரூ.423.09-ககா இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி 14.2 கிலோ சிலிண்டரின் விலை ரூ.1.93 உயர்த்தப்பட்டது.
டீசலுக்கான மானிய சுமையிலிருந்து அரசு வெளிவந்த வழியைப் பின்பற்றி மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு மானிய சுமையிலிருந்து வெளியேற சமீபத்தில் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி மாதம் 2 ரூபாய் அளவில் சமையல் எரிவாயுவுக்கான விலையை உயர்த்துவது என்கிற முடிவை எடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.