உச்சநீதிமன்ற தீர்ப்பு பாராட்டுக்குரியது. இந்திய அரசியலமைப்பின் கீழ் 'தனிநபர் உரிமை என்பது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தான்' என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கூறியதாவது, "தனியுரிமைக்கான உரிமைகள் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும் என நாங்கள் கூறியதையே உச்சநீதிமன்றம் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம் என்றும், மேலும் தனிநபர் உரிமை என்பது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தான் எனவும் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், மந்திரிகள் தங்கள் மூன்று மாத பயண விவரங்கள் குறித்த அறிக்கையை 13-ம் (இன்று) தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவி வகிப்பவர் மகேஷ் சர்மா. இவர் காரில் வந்தபோது வாயிற்காவலர்கள் கதவை திறக்க தாமதமானது. இதனால், அமைச்சரின் கார் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆத்திரம் அடைந்த அமைச்சரின் பணியாளர் அந்த வாயிற்காவலரை அடித்துள்ளார்.
ரக்ஷா பந்தனை முன்னிட்டு தனது காசியாபாத்தில் உள்ள தனது சகோதரியை சந்திக்க அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்லும் போது, இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.