3 மாத பயண விவரங்களை தாக்கல் செய்ய மந்திரிகளுக்கு மோடி உத்தரவு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், மந்திரிகள் தங்கள் மூன்று மாத பயண விவரங்கள் குறித்த அறிக்கையை 13-ம் (இன்று) தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Last Updated : Feb 13, 2017, 10:05 AM IST
3 மாத பயண விவரங்களை தாக்கல் செய்ய மந்திரிகளுக்கு மோடி உத்தரவு title=

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், மந்திரிகள் தங்கள் மூன்று மாத பயண விவரங்கள் குறித்த அறிக்கையை 13-ம் (இன்று) தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதற்கு ஒருங்கிணைப்பாளராக கிராமப்புற வளர்ச்சி மேம்பாட்டுத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமரை அவர் நியமித்தார்.
மந்திரிகள் தங்கள் அறிக்கையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு கடந்த 3 மாதங்களில் தங்களின் பாராளுமன்ற தொகுதி உள்பட எங்கெங்கு பயணம் செய்தார்கள், அப்படி பயணம் செய்யாதவர்கள் டெல்லியில் தங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்தார்களா என குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி எடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்களா, அலுவலகங்களில் கோப்புகளை ஆய்வு செய்தார்களா, என்பதை அறியவே இந்த அறிக்கையின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending News