தீவிரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் அமெரிக்க விமானப் படை நடத்தி வரும் தாக்குதலில், அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் அபு அப்கான் அல்-மஸ்ரி கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள ஷியா மசூதி ஒன்றில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த வெடி குண்டு தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் 35 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மிகப்பெரிய ராணுவ தளத்தில் குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பேர் பலியாகிள்ளனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பெற்கவில்லை.
ஆப்கானிஸ்தானின் வடக்கேயுள்ள மசார்-இ-ஷரிப் நகரில் அமைந்துள்ள ஜெர்மன் நாட்டுத் தூதரகம் மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடை பெற்றது. in தா தாக்குதலில் 2 பேர் பலியாகினர்.
காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாம் தாக்குதலை கண்டிக்கும் விதமாக பாகிஸ்தானில் நடக்கவிருந்த சார்க் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக இந்தியா அறிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக சார்க் மாநாட்டை புறக்கணிக்க போவதாக ஆப்கானிஸ்தான், பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகளும் அறிவித்தன.
சார்க் அமைப்பில் உள்ள 8 நாடுகளில் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் மாநாட்டை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளன. இதனால் சார்க் மாநாடு ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் இவர்களை சமாதானப்படுத்தி சார்க் மாநாட்டை நடத்த, மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ள நேபாளம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் தொண்டு நிறுவனம் மீது தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் பற்றி டுவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- இந்த சம்பவத்தில் 10 வெளிநாட்டினர் உள்பட 42 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்ற தகவலையும் அவர் உறுதி செய்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த பேரணியில் தற்கொலை படையை சேர்ந்த 3 பேரின் குண்டு வெடித்ததில் 50 பேர் பலியாகி உள்ளனர். 160-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தான் காபூலில் தெக் மசங்கில் ஏழைகள் அதிகம் வசிக்கும் பகுதி வழியாக மின்சார லைனைக் கொண்டு செல்லக் கோரி மாபெரும் பேரணி நடந்து கொண்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது தற்கொலை படையை சேர்ந்த 3 பேர் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்.
காபூலின் புறநகர் பகுதியில் போலீஸ் படையினரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பேருந்தில் இருந்த 40 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வந்துள்ளன.
இந்த தாக்குதல் பற்றி முழுமையான தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், தலீபான் பயங்கரவாதிகள்தான் இந்த தாக்குதலை நடத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானின் உள்துறை மந்திரி சேதிக் சிதிக்கி தனது டுவிட்டர் பக்கத்தில்:- இந்த தாக்குதல் பற்றிய விவரங்களை சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
ஐந்து நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். தனது முதல் பயணமாக ஆப்கானிஸ்தான் செல்கிறார். ஆப்கானிஸ்தான் சென்ற பிரதமர் அங்கு அந்நாட்டின் பிரதமர் அஷ்ரப் கனியை சந்தித்து பேசினார். பிறகு ஹெராத் மாகாணத்தில் உள்ள சல்மா அணையை திறந்து வைத்தார். இந்த அணை இந்தியாவின் உதவியால் புதுப்பிக்கப்பட்டது.
இரண்டு நாள் சுற்று பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக ஈரான் சென்றுள்ளார். நேற்று ஈரான் தலைநகர் தெஹ்ரான் சென்றடைந்தார். அங்கு இரு நாட்டு வர்த்தகம், எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை பற்றி பேச்சு வார்த்தை நடத்தப்படும் என கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.