திமுகவினரின் சொத்து குறித்த 2-ம் கட்ட பட்டியல் கோவையில் வெளியிடப்படுமென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெற்றவை குறித்த தகவல்கள் அதில் இடம்பெற்றிருக்கும் எனவும் கூறினார்.
புதிய பாராளுமன்ற கட்டிடம் திருப்பு விழாவிற்கு அனைத்து எம்பிக்களும் பங்கேற்க வேண்டும். புதிதாக வரக்கூடிய எம்பிகளுக்கும் சேர்த்தே விசாலமாக கட்டப்பட்டுள்ளது - அண்ணாமலை.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் தூண்டுதலின்பேரில் தனக்கு மிரட்டல்கள் வருவதாக கோவையைச் சேர்ந்த பாஜக நிர்வாகி அண்ணாதுரை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
டாஸ்மாக் மூலம் தாங்கள் பதுக்கி வைத்து ரூ. 2000 நோட்டுகளை திமுகவினர் மாற்றிக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பாஜகவின் மாநிலத் துணை தலைவர் கே.பி. இராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
2000 ரூபாய் நோட்டு வைத்துள்ளவர்கள் அதனை பதுக்கி வைத்தவர்கள் என்றும் 2000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் இருந்து பெறுவது கொள்ளையடித்தவர்களுக்கு தான் பிரச்சனை என்றும் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாரய பயன்பாட்டை கட்டுப்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தவுள்ளதாக பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் நீக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சசிகாந்த் செந்திலும், பாஜகவுக்கு அண்ணாமலையும் தேர்தல் பணி ஆற்றிருக்கும் நிலையில், இரண்டு தமிழர்களில் யாருடைய பணி சிறப்பாக இருந்தது என்பதை இங்கே பார்க்கலாம்.
Annamalai On TN Cabinet Reshuffle: பாஜகவை பொருத்தவரை நாங்களாக யாரையும் எங்கள் கட்சிக்கு வருமாறு அழைக்க மாட்டோம் என்றும் ஆனால் கமலாலயத்தின் கதவு எப்போதும் திறந்தே உள்ளது என்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
CM Stalin Defamation Case Against Annamalai: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
TR Balu About Annamalai: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது மே 8ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடரப்போவதாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
தமிழ்நாடு நிதியமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திமுக தலைமை மற்றும் குடும்ப உறுப்பினர்களை பற்றி பேசியதாக அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பிடிஆர் விளக்கம் அளித்த நிலையில், அவரை மட்டும் பாஜக குறிவைப்பது ஏன்? என்பதற்கு அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படும் தகவல்களை பார்க்கலாம்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி மற்றும் பாஜக நிர்வாகிகள் சாலையில் கட்டைகளை கொண்டு தாக்கிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.