முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என பாமக இளைஞரணித் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி அணையில் பழுதான முதல் மதகையினை ஓரிரு நாட்களில் சீரமைக்கும் பணி நடைபெறவுள்ளதை அடுத்து, அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 127 அடியை எட்டியதை அடுத்து அணையின் நீர் திறக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியின் இரண்டாம் போக பாசனத்திற்காக முல்லைப் பெரியாறு அணை இன்று திறக்கப்பட்டது.
தேக்கடி மதகுப் பகுதியில் இதற்காக ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் துனை முதல்வர் கலந்துக்கொண்டனர். தொடர்ந்து 120 நாட்களுக்கு வினாடிக்கு 200 கனஅடி வீதம் அணையின் நீர் திறக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் தொடர் மழை காரணமாகவும், மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாகவும் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
தற்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியுள்ளது.
விநாடிக்கு 1,266 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. எனவே அணையிலிருந்து விநாடிக்கு 225 கனஅடி தண்ணீர் இரைச்சல்பாலம் வழியே திறந்து விடப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் தமிழகத்தின் பல்வேறு அணைகளிலும் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு கேரள அரசு இடையூறு செய்கிறது என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது
முல்லைபெரியாறு அணை பகுதியில் அம்மாநில அரசின் ஒத்துழைப்புடன் ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால்முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு கேரள அரசு இடையூறு செய்கிறது.
மேலும் அணை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கேரளாவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை ஜூலை 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.