கடந்த சில மாதங்களாக அதிமுக அடுத்தடுத்து பல சஸ்பென்ஸ்களை மக்களுக்கு கொடுத்து வருகிறது. அந்த வகையில் அடுத்த சஸ்பென்சை இன்று தினகரன் ஆரம்பித்துள்ளார்.
நேற்று அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பல பரபரப்பு சம்பவங்கள் நடத்து முடிந்த நிலையில் இன்று தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன், டி.டி.வி தினகரன் ஆலோசனை செய்து வருகிறார். இந்த கூட்டத்தில் அவரது ஆதரவு எம்எல்ஏ.க்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், சுப்பிரமணியம், சுந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இன்று காலை, ஆ.தி.மு.க-வின் இரண்டு அணிகளையும் இணைப்பது குறித்து பேசுவதற்தைகள் அ.தி.மு.க தலைமையகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளராக தினகரன் நீடிக்க முடியாது என ஏற்க்கபட்ட தீர்மானம் செய்யப்பட்டது.
இந்த தீர்மானம் செல்லாது என தினகரன் அதிரடியாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, தேர்தல் ஆணைய உத்தரவுபடி ஆ.தி.மு.க (அம்மா) என்று தான் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். எனவே இந்த தீர்மானம் செல்லாது எனவும்.
தமிழகம் ஆளும் அதிமுக சமிபகாலமாக பல்வேறு பரபரப்பான சூழ்நிலைகளை ஏற்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூர் சிறைச்சாலையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பானது ஒரு மணி நேரம் நடந்தது. பின்னர், டி.டி.வி.தினகரன் சிறை அருகே நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-
தமிழகம் ஆளும் அ.தி.மு.க சமிபகாலமாக பல்வேறு பரபரப்பான சூழ்நிலைகளை ஏற்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூர் சிறைச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து பேசினார்.
அதிமுக இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதற்காக கட்சியில் இருந்து விலகி இருந்த அதிமுக கட்சியின் துணை போதுச்செயலாளர் தினகரன், இனி கட்சியை நான் வழி நடத்துவேன். இதனால் அனைத்து மாவட்ட நிர்வாகிகளை வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேச உள்ளதாக அறிவித்துள்ளார்.
அதிமுக,3 அணிகளாக பிரிந்துள்ள நிலையில், தினகரனின் இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக அதுமுக-வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்ததும் இன்று மாலை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.
அதிமுகவின் பல்வேறு நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் தினகரனை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்ட 34 எம்எல்ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தென்காசி தொகுதி எம்.பி., வசந்தி முருகேசனும் நேற்று காலை தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 19 அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். இந்த அவசர ஆலோசனையை தொடர்ந்து அமைச்சர்கள் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.
முன்னதாக இரு அணியாக இருக்கும் அதிமுக மீண்டும் இணைய வேண்டுமென்றால் தினகரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பன்னீர்செல்வம் அணி முன்வைத்தது. இதற்கு எடப்பாடி அணியும் ஒப்புக்கொண்டது.
தற்போது ஜாமீனில் வெளிவந்த தினகரன் இன்று, பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவைச் சந்திக்கச் சென்றார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் பிளவு பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதிமுக சின்னம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் கமிஷன் முடக்கிவைத்து இருக்கும் இரட்டை இலை சின்னத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக அதிமுக-வின் இரு அணிகளையும் சேர்ப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது.
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் வரும் 19, 20 தேதிகளில் டி.டி.வி.தினகரன் கட்டாயமாக ஆஜராக வேண்டும் என்று சென்னை எழும்பூரில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1995 1996-ம் ஆண்டுகளில் டி.டி.வி.தினகரனின் வங்கிக் கணக்குகளில் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டதால் அவர் மீது அந்நியச் செலாவணி மோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்தது. இதையடுத்து, தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அமலாக்கத்துறை அபராதம் விதித்தது.
இந்த அபராதத்தை ரத்து செய்யக்கோரி டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் அண்ணன் மகன் வெங்கடேஷ் ஆகியோர் அதிமுகவில் இன்று மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.