உணவு பொருட்களில் எப்போதும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இது, அந்த பொருளின் தரத்தை நிரூபிக்கும் வகையிலும், எந்த காலம் வரை அந்த தரம் நிலைக்கும் என்பதை காண்பிக்கும் வகையிலும் காலக்கெடு வைக்கப்பட்டிருக்கும். அந்த காலம் வரைதான் அந்த உணவை நம்மால் சாப்பிட முடியும். அதற்கு பின்பு அந்த உணவை சாப்பிட்டால் உடலில் பல்வேறு உபாதைகள் வர ஆரம்பித்துவிடும். அப்படி, நாம் மறந்தும் காலக்கெடு முடிந்த பிறகு சாப்பிடக்கூடாத 5 உணவுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
பிரட்:
சீக்கிரமாகவே வயிற்றை நிரப்பிவிடும் உணவு பொருட்களுள் ஒன்று, பிரட். ஜாம், சாஸ் வைத்து எப்படி வேண்டுமானாலும் இந்த உணவை சாப்பிடலாம். இது, உருவாக்கப்பட்ட 3 முதல் 7 நாட்களுக்குள் சாப்பிட்டு விட வேண்டும். அந்த காலக்கெடுவை தாண்டிவிட்டால், பிரட்டில் பூஞ்சை பிடித்து விடும். இதனால் பாக்டீரியாக்களும் அந்த பிரட் முழுவதும் பரவ ஆரம்பித்துவிடும். இப்படிப்பட்ட பிரட்டை சாப்பிட்டால், உடலில் அலர்ஜிக்கல் வர வாய்ப்புள்ளது. இது, சுவாசக்கோளாறு பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடும்.
சீஸ்:
சீஸை, காலாவதியான பிறகு சாப்பிடக்கூடாது. இதனால், உடலுக்கு பல்வேறு உபாதைகள் வர வாய்ப்புள்ளது. இதில், லிஸ்டெரியா மற்றும் பாக்டீரியா இ ஆகியவை உருவாகும். அது மட்டுமன்றி, இதை சாப்பிடுவதால் உடலில் உட்புறமாகவும் வெளிபுறமாகவும் அலர்ஜி ஏற்படலாம். இதனால், செரிமான கோளாறுகள் ஏற்படும். உணவு விஷமாக மாறுவதால், உடலுக்கு கேடு விளைவிக்கும் டாக்ஸின்ஸும் உருவகும். இது, பல்வேறு உடல் நலக்குறைவுக்கு காரணமாக அமையும். குறிப்பாக, கர்ப்பமாக இருக்கும் பெண்கள், வயதானவர்கள், சிறு வயது குழந்தைகள் இதனை சாப்பிடவே கூடாது. இது அவர்களுக்கு பெரிதளவில் தீங்கு விளைவிப்பதாக இருக்கும்.
மீன் உள்பட சில கடல் உணவுகள்:
மீன் உள்பட சில கடல் உணவுகளுக்கு, காலாவதி தேதி நிர்ணயிக்கப்படும். மீன்கள், ஃப்ரிஜ்ஜில் வைத்து பாதுகாக்கப்படாமல் இருந்தால், 1-2 நாட்கள் வரை மட்டுமே அதற்கு காலாவதி ஆவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும். இன்னும் பிரத்யேகமாக பாதுகாக்கப்பட்டால், 3 முதல் 4 மாதங்களுக்கு இவை நன்றாக இருக்கும்.
முட்டை:
முட்டைக்கும், அனைத்து உணவுகளை போல, காலாவதி தேதி இருக்கிறது. முட்டையை அதிகம் சாப்பிட்டாலே, பல சமயங்களில் செரிமானக்கோளாறுகள் ஏற்படும். அதிலும் காலாவதியான முட்டைகளை சாப்பிட்டால் என்ன ஆகும்? இதனால் நாம் சாப்பிடும் உணவு விஷமாவதுடன், வாந்தி-வயிற்றுப்போக்கு உள்பட பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படும். ஒரு முட்டை கெட்டுப்போய் விட்டதா இல்லையா என்று பார்ப்பதற்கு, அதை ஓட்டுடன் தண்ணீரில் போட வேண்டும். அது தண்ணீரில் மூழ்கி விட்டால், அது கெட்டுப்போய் விட்டதாக அர்த்தம். அந்த முட்டையில் எங்காவது ஓடு உடைந்திருந்தால், அது காலாவதியான முட்டை என்று அர்த்தம்.
பால்:
பால், எளிதில் கெட்டுவிடக்கூடிய உணவுப்பொருள். இதை, காலாவதியான பிறகு குடிப்பதால், இதில் இருக்கும் ஆபத்தான பாக்டீரியாக்கள், வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சனைகளை உருவாக்கும். பால் கெட்டுப்போனதா இல்லையான என கண்டுபிடிக்க அதை முதலில் நல்ல பாத்திரத்தில் அடுப்பில் ஊற்றி காய வைக்க வேண்டும். பாலை ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் மட்டுமே 1 நாளைக்கும் மேல் நன்றாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ