நேர்த்தியான தோற்றத்தில் உருவாகியிருக்கிறது Hyundai Ioniq 6 மின்சார செடான் கார். உலகளவில் பிராண்டின் அதிகரித்து வரும் EV போர்ட்ஃபோலியோவில் Ioniq 5, Kona EV உடன் இந்த நவீன காரும் இணைகிறது. எலக்ட்ரிக் செடானின் விவரக்குறிப்புகள் மற்றும் விலையை ஹூண்டாய் இன்னும் வெளியிடவில்லை.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க லித்தியம் பேட்டரில் இயங்கும் ஜீப்பை உருவாக்கியுள்ள இளைஞர் வெறும் 40 ரூபாய் செலவில் 280 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் என அசத்தி வருகிறார்.
Bgauss BG D15 Electric Scooter: மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளர் பீகாஸ் இந்தியாவில் புதிய பிஜி டி 15 மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பி8 மற்றும் ஏ2 ஆகிய இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டொயோட்டா மின்சார கார் உற்பத்தியில் அடியெடுத்து வைத்துள்ளது. ஜப்பானிய சந்தையில் bZ4X மின்சார SUV ஐ அறிமுகப்படுத்தியுள்ளது டொயோட்டா. புதிய EV அதிகாரப்பூர்வமாக மே 12 அன்று வெளியிடப்படும்.
டெல்லி அரசு மின்சார சைக்கிள் வாங்குபவர்களுக்கு மானியத் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், எலக்ட்ரிக் சைக்கிள் (Electric Cycle) வாங்கும் முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,500 மானியம் வழங்கப்படும்.
சொகுசு கார் தயாரிப்பாளரான மசெராட்டி தனது முதல் மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது. Maserati Grecale Folgore SUV EV பிரிவில் அதன் முதல் அதிரடி தொடக்கமாக இருக்கும்.
இந்த புதிய கார் வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய மிகவும் விலையுயர்ந்த மின்சார காராக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த காரின் விலை மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
புதுடெல்லி: இந்த மாதம் அறிமுகமாகும் MG ZS EV 2022 மின்சாரத்தில் இயங்கும் கார். 2021 வேரியண்டுடன் ஒப்பிடும்போது மிகவும் நவீன வடிவமைப்புடன் வருகிறது. இந்த புதிய மாடல், MG ஆஸ்டரிலிருந்து வித்தியாசமானதாக இருக்கிறது
ஓலா எஸ்1, ஏதர் 450எக்ஸ் மற்றும் சிம்பிள் ஒன் ஆகியவை தற்போது இ-ஸ்கூட்டர் பிரிவில் அதிகம் பேசப்படும் ஸ்கூட்டர்களாகும். அவற்றின் சிறப்பம்சங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.