ஆப்பிள் நிறுவனத்தின் எலட்ரிக் கார் எப்போது வெளியாகும்: காப்புரிமையை புதுப்பித்தது Apple

ஆப்பிள் நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொடங்கிவிட்டதா? டெஸ்லாவுடனான ஆப்பிள் நிறுவத்தின் போட்டியின் உச்சம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 11, 2022, 08:12 AM IST
  • தொழில்நுட்ப நிறுவனம் ஆப்பிளின் புது அவதாரம்
  • விரைவில் ஆப்பிள் கார் வெளியாகலாம்
  • காரின் மென்பொருள் காப்புரிமை புதுப்பிப்பு
ஆப்பிள் நிறுவனத்தின் எலட்ரிக் கார் எப்போது வெளியாகும்: காப்புரிமையை புதுப்பித்தது Apple title=

ஆப்பிள் காரின் மென்பொருள் தொடர்பான காப்புரிமையை அந்த நிறுவனம் புதுப்பித்துள்ளது. எனவே ஆப்பிள் கார் விரைவில் வெளியாகலாம் என்று ஊகிக்கப்படுகிறது. 
 
எலக்ட்ரிக் காரை உருவாக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் திட்டம் 2018 ஆம் ஆண்டு அம்பலமானது. அதற்காக ஆப்பிள் ஒரு முக்கிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரைத் தேடத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை வாகன உற்பத்தியாளர் யாருடனும் ஆப்பிள் கூட்டாக செயல்படுவதாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்லாவுடன் போட்டி
டெஸ்லாவுடனான ஆப்பிள் நிறுவத்தின் போட்டி சிதம்பர ரகசியம் என்பதல், விரையில் தானியங்கி வாகனம் ஒன்றை ஆப்பிள் அறிமுகப்படுத்தும் என அனைவரும் ஊகிக்கின்றனர்.

அந்த  வாகனம் முழுவதுமாக மின்சாரத்தில் இயங்கும் வாகனமாக இருக்கும். இந்த வாகனம், டெஸ்லாவின் காருக்கு நேரடி போட்டியாளராக களத்தில் இறங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எதிர்பார்ப்புக்கு காரணம், ஆப்பிள் கடந்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான டெஸ்லா பொறியாளர்களை வேலைக்கு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

tech
மென்பொருளை மையமாகக் கொண்ட கார்
ஆப்பிள் ஸ்மார்ட் கார்களுக்கான மென்பொருளை உருவாக்குமா அல்லது தங்கள் சொந்த மென்பொருளைக் கொண்டு சொந்த காரை அறிமுகப்படுத்துமா? என்ற கேள்வியே இப்போது பெருமாபாலானவர்களின் மனதில் எழுந்துள்ளது.

ஆப்பிள் காரைப் பற்றிய தொடர் கேள்விகளுக்கு ஒற்றை பதிலைக் கூறிய டிம் குக், ​​​​ஹார்டுவேர் மற்றும் மென்பொருளுக்கு இடையில் உருவாக்கப்பட்ட "மேஜிக்கை" நிறுவனம் நம்புகிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோன் ரூட்டிலேயே, தனது காரையும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது என்பதற்கு இது ஒரு வலுவான சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.. நிறுவனம், காருக்கான வன்பொருள் மற்றும் மென்பொருளை (Harware and software) மிக உயர்ந்த அளவிலான தரத்தில் அமைக்க முயன்று வருவதாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க | மொபைல் பேட்டரிகள் வெடிப்பதற்கான காரணம் இதுதான் - இந்த தவறை செய்யாதீங்க

ஐபோன் 
PatentlyAppl இன் சமீபத்திய அறிக்கையின்படி, ஆப்பிள் காரின் மென்பொருளைச் சுற்றி வேலை செய்யும் பழைய காப்புரிமையை ஆப்பிள் புதுப்பித்துள்ளது. அதாவது ஆப்பிள் நிறுவனம், தனது வெற்றிகரமான ஐபோன் சாதனைகளைத் தொடர்ந்து கார் உற்பத்திலும் தடம் பதிக்கலாம். 

ஆப்பிள் கார் கேபின்
ஆப்பிள் நிறுவனத்தின் வித்தியாசமான முயற்சிகள், வழக்கமான கார்களை விட வித்தியாசத்தைக் காட்டும் என்றும் நம்பப்படுகிறது. வித்தியாசமான ஸ்டீயரிங் இருக்கலாம்.  காரின் நாற்காலிகள், சுழலும் நாற்காலிகளாக இருக்கலாம் என்ற எதிர்ப்பார்ப்புமிருக்கிறது. இது சாத்தியமானால், ஆப்பிளின் கார்கள் ஆட்டோமொபைல் சந்தையில் புதிய சாதனையை படைக்கும்.

காப்புரிமை தாக்கல் செய்ததில், பயனர் விரும்புவதற்கு ஏற்ப ஒளிபுகாநிலையை மாற்றக்கூடிய கண்ணாடியைப் பயன்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. காரின் சன்ரூஃப் மற்றும் கண்ணாடி பேனல் வழியாக வரும் ஒளியின் அளவை பயனர்கள் எவ்வாறு சரிசெய்ய முடியும் என்பது ஆப்பிளின் காப்புரிமையில் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுவது ஆப்பிள் நிறுவனத்தின் கார் தொடர்பான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம், 2025 ஆம் ஆண்டில் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கெவின் லிஞ்ச் தலைமையில் ஆப்பிள் கார் திட்டம் தற்போது செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

ஆப்பிள் வாட்ச் மற்றும் ஹெல்த் போன்ற தயாரிப்புகளின் மென்பொருளின் பின்னால் கெவின் லிஞ்ச் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் நிறுவனத்தின் பல மூத்த நிர்வாகிகள், விலகி வரும் நிலையில், புதிய உயர்நிலை அதிகாரிகள் ஆப்பிளில் சேர்ந்து வருகின்றனர். ஃபோர்ட் கார் நிறுவனத்தின் மூத்த ஊழியர் தேசி உஜ்காஷெவிக், ஃபோர்டில் 31 ஆண்டுகள் பணி புரிந்த அனுபவம் கொண்டவர். அவர் தற்போது ளை முடித்த பிறகு ஆப்பிள் கார் அணியில் சேர்ந்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவித்துள்ளதும் இதன் பின்னணியில் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஆகும்.

மேலும் படிக்க | பிரெஸ்ஸாவுக்கு கிடைத்த 5 ஸ்டார் ரேட்டிங் - மகிழ்ச்சியில் மாருதி நிறுவனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News