குவைத் நாட்டுக்குச் சென்ற முத்துக்குமரனுக்கு உரிய பணி கொடுக்காமல், ஒட்டகம் மேய்க்கக் கூறி உள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, தனது குடும்பத்தினரிடம் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக கதறி உள்ளார்.
வறுமையில் சிக்கித் தவித்த முத்துக்குமரன் வெளிநாடு சென்று வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, தனியார் முகவரிடம் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணம் கொடுத்து, கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளார்.
NRI News: குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை தாயகம் கொண்டுவர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
கட்டுமானம், கடல் சார் வணிக துறைகளில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும், தங்குமிடங்களில் வசிப்பவர்களுக்கும் முதலாளிகள் PCP என்னும் கட்டாய சுகாதார திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற விதி சில மாதங்களுக்கு முன் கொண்டு வரப்பட்டது.
சிங்கப்பூரில் பணிபுரியும் அயல் நாட்டவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. வெளிநாட்டு பணியாளர்களுக்கான சுகாதார முதன்மை பாதுகாப்பு திட்டத்தை சிங்கப்பூர் அரசு சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.