குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரின் உடல் நாளை திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும்

குவைத் நாட்டுக்குச் சென்ற முத்துக்குமரனுக்கு உரிய பணி கொடுக்காமல், ஒட்டகம் மேய்க்கக் கூறி உள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, தனது குடும்பத்தினரிடம் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக கதறி உள்ளார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 15, 2022, 11:12 AM IST
  • கடந்த 7 ஆம் தேதி புதன் கிழமை முத்துக்குமரன் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி குடும்பத்தினருக்குக் கிடைத்துள்ளது.
  • முத்துக்குமரன் பணி செய்த குவைத் நாட்டைச் சேர்ந்தவர்தான் அவரைச் சுட்டுக் கொன்றிருப்பதாக தகவல் கிடைத்து.
  • இதைக் கேட்ட அவரது மனைவியும், குடும்பத்தினரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரின் உடல் நாளை திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும்  title=

குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரனின் உடல் நாளை திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட திருவாரூரை சேர்ந்த முத்துக்குமாரின் உடல் நாளை திருச்சி விமான நிலையம் கொண்டுவரப்படுகிறது. திருச்சி வந்த பின்னர் அவரது சொந்த ஊரான லட்சுமாங்குடிக்கு முத்துக்குமாரின் உடல் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அரசு சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முத்துக்குமரனை கொன்ற குவைத் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘முத்துக்குமரன் குவைத் செல்ல ஏஜென்ட் ஆக செயல்பட்ட ஆந்திரா மற்றும் உத்தர பிரதேஷ் மாநிலங்களைச் சேர்ந்த பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாளை முத்துக்குமார் உடல் திருச்சி விமான நிலையம் வந்த பிறகு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்’ என்று தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். சொந்த ஊரில் சிறு கடை வைத்து, தொழில் செய்து வந்த நிலையில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் இவர் தனது கடையை மூடிவிட்டார்.

மேலும் படிக்க | குவைத்தில் கொல்லப்பட்ட தமிழரின் உடலை தாயகம் கொண்டு வர வைகோ கோரிக்கை

வறுமையில் சிக்கித் தவித்த முத்துக்குமரன் வெளிநாடு சென்று வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, தனியார் முகவரிடம் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணம் கொடுத்து, கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

குவைத் நாட்டுக்குச் சென்ற முத்துக்குமரனுக்கு உரிய பணி கொடுக்காமல், ஒட்டகம் மேய்க்கக் கூறி உள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, தனது குடும்பத்தினரிடம் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக கதறி உள்ளார். 

இடைத்தரகர் மூலமும், இந்தியத் தூதரகம் மூலமும் தாயகம் திரும்புவதற்கு அவர் முயற்சித்துக்கொண்டு இருந்த வேளையில், கடந்த 7 ஆம் தேதி புதன் கிழமை முத்துக்குமரன் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி குடும்பத்தினருக்குக் கிடைத்துள்ளது. முத்துக்குமரன் பணி செய்த குவைத் நாட்டைச் சேர்ந்தவர்தான் அவரைச் சுட்டுக் கொன்றிருப்பதாக தகவல் கிடைத்து. இதைக் கேட்ட அவரது மனைவியும், குடும்பத்தினரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது குடும்பத்தினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் தகவலைத் தெரிவித்து, முத்துக்குமரன் உடலை உடனே தாயகம் கொண்டு வருவதற்கு மத்திய மற்றும் மாநில அரசு உதவிட வேண்டும் என்று கேட்டுள்ளனர். 

மத்திய மாநில அரசுகள் இதில் உடனடியாக தலையிட்டு, தற்போது குவைத்தில் பரிதாபமாக உயிரிழந்த அவரது உடல் அவரது சொந்த ஊருக்கு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரை சுட்டுக்கொன்ற நபர் மீதும், பொய்யான தகவல்களை கூறி அவரை குவைத்துக்கு அனுப்பி வைத்த முகவர்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க | ராமேஸ்வரத்தை சேர்ந்த ஆறு மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News