அங்காரகரின் அன்பான பார்வையினால் அதிர்ஷ்டத்தால் தூள் கிளப்பப்போகும் ராசிகள்!

Mars Transit June 1: ஜூன் 1ம் தேதி மாலை 03:37க்கு செவ்வாய் மேஷ ராசிக்கு சஞ்சாரம் செய்கிறார். மேஷத்தில் பிரவேசிக்கும் செவ்வாய்ப் பெயர்ச்சியின் பலன்கள் யாருக்கெல்லாம் சாதமாக இருக்கும்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 31, 2024, 07:54 PM IST
  • செவ்வாய் பெயர்ச்சியின் நன்மைகளை பெறும் ராசிக்காரர்கள்
  • செவ்வாயும் சனியும் இணைந்தால் அபார லாபம்
  • செவ்வாய் பெயர்ச்சியால் புதிய வாய்ப்புகளை பெறும் ராசி
அங்காரகரின் அன்பான பார்வையினால் அதிர்ஷ்டத்தால் தூள் கிளப்பப்போகும் ராசிகள்!  title=

இந்த ஆண்டின் ஆறாம் மாதமான ஜூன் மாதம் நாளை தொடங்கப் போகிறது. புதிய மாதம் பிறக்கும்போது, செவ்வாய் பகவான், தனது ராசியை மாற்றுகிறார் என்பது ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். கிரகங்களின் தளபதியான செவ்வாய் தனது ராசியை ஜூன் முதல் தேதி மாற்றுவார். இதன் பிறகு, ஜூலை 12 மாலை 6:58 மணிக்கு, மீண்டும் ராசி மாற்றம் செய்வார். 

ஜூன் 1ம் தேதி மாலை 03:37க்கு செவ்வாய் பெயர்ச்சி

நாளை  ஜூன் 1ம் தேதி மாலை 03:37க்கு செவ்வாய் மேஷ ராசிக்கு சஞ்சாரம் செய்கிறார். மேஷத்தில் பிரவேசிக்கும் செவ்வாய்ப் பெயர்ச்சியின் பலன்கள் யாருக்கெல்லாம் சாதமாக இருக்கும்? செவ்வாய் ராசியில் ஏற்படும் மாற்றம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாக கருதப்படுகிறது.

செவ்வாயின் ராசி மாற்றம்

செவ்வாயின் ராசி மாற்றம், மூன்று ராசிக்காரர்களின் பொருளாதார நிலையில் மட்டுமல்ல, மனநிம்மதி, ஆரோக்கியம் சிந்தனையில் தெளிவையும் கொடுக்கும். அடுத்த செவ்வாய்ப் பெயர்ச்சிக்கு முன்னதான 42 நாட்களுக்கு இவர்களுக்கு அனுகூலமான நன்மைகள் ஏற்படும். லாபம் அதிகரிக்கும்அந்த அதிர்ஷ்டக்கார ராசிகள் எவை? தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க | 18 ஆண்டுகளுக்குப் பிறகு சனி நட்சத்திரத்தில் நுழையும் ராகு..! 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். திருமணக்காரகராna செவ்வாய் கிரகத்தின் இந்தப் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு திருமணத் தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல காலம் தொடங்கும். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை முன்னேறும். வருமானம் அதிகரிப்பதால், செலவுகளை மனம்போல் செய்துவிட வேண்டாம்.

குடும்பத்தில் மன ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது.

மிதுனம்
செவ்வாயின் ராசி மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளைக் கொடுக்கும். வேலை செய்பவர்களுக்கு சாதகமன காலம் இது. பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். தைரியமாக இருப்பதன் வலிமையை உணரும் நேரம் இது. இந்த செவ்வாய்ப் பெயர்ச்சி காலகட்டத்தில் கிடைக்கும் அதிக வருமானம் உங்கள் மனதில் சொல்லவொண்ணா மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சாரம் நன்மை பயக்கும். முதலீடு செய்தவர்களின் முதலீடுகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும். உங்கள் ஆத்மார்த்தமான வேலைகளுக்கு தகுந்த பாராட்டு கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகல் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஜூன் மாதம் முதல் வார ராசிபலன் அறிவோம்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News