வெங்காயத்தை ரேஷன் கடைகளில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செல்லூர் ராஜூ

வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தால், ரேஷன் கடைகள் மூலம் வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே ராஜு தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 22, 2020, 05:28 PM IST
  • வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தால், ரேஷன் கடைகள் மூலம் வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே ராஜு தெரிவித்தார்.
  • சென்னையில் உள்ள ஃபார்ம் ஃப்ரெஷ் விற்பனை நிலையங்கள் மூலம், பெரிய வெங்காயத்தை ஒரு கிலோ ரூ .45 க்கு விற்பனை செய்யும் திட்டத்தை தொடக்கி வைத்தார்
வெங்காயத்தை ரேஷன் கடைகளில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செல்லூர் ராஜூ title=

சென்னை: வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தால், ரேஷன் கடைகள் மூலம் வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே ராஜு தெரிவித்தார்.

150 மெட்ரிக் டன்களை சப்ளை செய்வதற்காக இந்திய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் உடன் தமிழக அரசு ( Tamilnadu Government) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால், விரைவில் மாநிலத்திற்கு போதுமான அளவு வெங்காயம் கிடைக்கும் எனவும் மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

சென்னையில் (Chennai) உள்ள ஃபார்ம் ஃப்ரெஷ் விற்பனை நிலையங்கள் மூலம்,  பெரிய வெங்காயத்தை ஒரு கிலோ ரூ .45 க்கு விற்பனை செய்யும் திட்டத்தை தொடக்கி வைத்த அவர், பெரிய வெங்காயத்தின் தேவை ஆண்டுக்கு ஆறு லட்சம் மெட்ரிக் டன் என்றும், சிறிய வெங்காயத்தின் தேவை நான்கு லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவில் உள்ளது என்றும் கூறினார்.

இதற்கிடையில், புதிய விவசாய சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிரானதாக இருப்பதால், அந்த சட்டங்களை அமல்படுத்த வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin)அதிமுக அரசிடம் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அரசு நிறைவேற்றிய  மசோதாக்கள் போல, விவசாயிகளை பாதுகாக்க சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மாநில அரசிடம் கோரினார்.

இது தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி (Edappadi.K. Palanisamy) சிறப்பு கூட்டத்தை வேண்டும் என்று அழகிரி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | தொடர்ந்து உயரும் வெங்காய விலைகள்: தீபாவளியில் புதிய உச்சத்தைத் தொடக்கூடும்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News