Myanmar coup: மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பு, நடந்தது என்ன?

ராணுவம் மியான்மர் ஆட்சியை கைப்பற்றியதை ஒப்புக் கொண்டது. அரசு ஓராண்டுக்கு தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும் அறிவிப்பு

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Feb 1, 2021, 01:37 PM IST
  • மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பு, ஒராண்டுக்கு ராணுவ ஆட்சி தொடரும்
  • மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் பர்மாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது
  • ஆங்சாங் சூகி உட்பட பல தலைவர்கள் கைது
Myanmar coup: மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பு, நடந்தது என்ன?  title=

மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை நீடிக்கும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. ஆங்சாங் சூகி (Aung San Suu Kyi) உள்ளிட்ட தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

மியான்மர் பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மியான்மர் நாட்டு ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. இது உலக அளவில் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது. 45 ஆண்டு தொடர்ந்த போராட்டங்களுக்குப் பிறகு ஆங்சாங் சூகி (Aung San Suu Kyi) வழிகாட்டுதலில் மியான்மரில் ஜனநாயக ஆட்சி சாத்தியமானது.

இந்த நிலையில் ஏற்பட்ட திடீர் ராணுவ புரட்சியின் காரணமாக ஆங் சான் சூகி உள்பட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு, அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் உலக அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. 

Also Read | Doomsday Clock அளிக்கும் பகீர் சமிக்ஞை.. உலகம் அழிவின் விளிம்பில் உள்ளதா..!!!

உலக நாடுகளின் கண்டனங்கள் கடுமையாக வந்துக் கொண்டிருக்கும் நிலையில், பர்மா மக்களும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவிட்டு தங்கள் வருத்தத்தையும், சீற்றத்தையும் பதிவு செய்து வருகின்றனர். #saveMyanmar, #myanmar என்ற ஹேஷ்டேகுகள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.

மியான்மர் நாட்டின் ராணுவ புரட்சி குறித்து இந்தியா உள்பட அண்டை நாடுகள் கலந்தாலோசிக்கும் என்று கூறப்படுகிறது. கொரோனா தொற்று பாதிப்பு இருந்தபோதிலும் பர்மாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கான தேர்தலில் அந்த நாட்டின் பிரபலத் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. வெளியான தேர்தல் முடிவுகளில்   பெரும்பான்மை பலத்துடன் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது.

Also Read | 2021 அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்ப், கிரேட்டா தன்பெர்க், நவல்னி ஆகியோர் பரிந்துரை

இநத தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ராணுவம் குற்றம் சாட்டி வந்த நிலையில் இன்று பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு, நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மியன்மர் நாட்டின் தலைநகர் நைபிடா மற்றும் முக்கிய நகரமான யங்கூன் உட்பட பல கரங்களினில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில் இணைய தளங்கள், தொலை தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

ALSO READ | பெண்களை இழிவுபடுத்துவதாக புகார்.. லோகோவை மாற்றியது Myntra..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News