மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து நேரில் விசாரிக்க இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர்.
மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து நேரில் விசாரிக்க இன்று சென்னை வருகிறார்கள்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் 22-ம் தேதி முதல் ஜெயலலிதாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் கூறப்பட்டு வருகிறது.முதல்வர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமாக வேண்டும் என தொல்.திருமாவளவன் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் தொல்.திருமாவளவன் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதா சிகிச்சை பெறும் வார்டுக்கு சென்று அதிமுக நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார்.
- ''தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக இருப்பதோடு, விவசாயத்திற்கு அடுத்தபடியாக கிராமப்புற மக்களுக்கு பெருமளவு வேலைவாய்ப்பினை வழங்கி வரும் தொழிலாக நெசவுத் தொழில் விளங்கி வருகிறது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தொழிலான நெசவுத் தொழிலின் வளர்ச்சிக்கு எனது தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தனது பிறந்தநாளையொட்டி இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தனி காரில் சென்று குஜராத் மாநிலம் காந்திநகரில் வசிக்கும் தனது தாய் ஹீராபென் மோடியிடம் ஆசிர்வாதம் பெற்றார்.
मां की ममता, मां का आशीर्वाद जीवन जीने की जड़ी-बूटी होता है। pic.twitter.com/JeEnDrVevU
— Narendra Modi (@narendramodi) September 17, 2016
ஏழை மக்கள் பயன் அடையும் வகையில்‘அம்மா திருமண மண்டபங்கள்’ கட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:- அனைத்து தரப்பு மக்களும் குடியிருப்பதற்கு சொந்த இல்லம் பெற்றிட வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் எனது தலைமையிலான அரசு பல்வேறு வீட்டுவசதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நடப்பு நிதியாண்டில், 1,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் 50,000 குடியிருப்புகள் கட்ட நான் உத்தரவிட்டுள்ளேன்.
சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து 20-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்திற்கு உரிய நீரை வழங்கிட வேண்டும் என தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நாளொன்றுக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் கிடைக்கும் வகையில் 5.9.16 முதல் 10 நாட்களுக்கு அதன் அணைகளிலிருந்து நீரை விடுவிக்கவேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஆணை வழங்கியது.
தனது பிறந்தநாளையொட்டி இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தனி காரில் சென்று குஜராத் மாநிலம் காந்திநகரில் வசிக்கும் தனது தாய் ஹீராபென் மோடியிடம் ஆசிர்வாதம் பெற்றார்.
मां की ममता, मां का आशीर्वाद जीवन जीने की जड़ी-बूटी होता है। pic.twitter.com/JeEnDrVevU
— Narendra Modi (@narendramodi) September 17, 2016
தமிழகத்தில் நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 16-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில் கூறியதாவது:- வரும் 16-ம் தேதி காலை 8.30 மணி முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும். வரும் 22-ம் தேதி மாலை 8 மணி வரை உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்யலாம். சென்னை மாநகராட்சிக்கான விண்ணப்பங்கள் கட்சி தலைமையகத்தில் வழங்கப்படும். மற்ற மாவட்டங்களில் மாவட்ட தலைமை கழகத்தில் விநியோகம் செய்யப்படும் என தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
- பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். "அதற்காக அவதூறு வழக்குகளை தாக்கல் செய்வது ஏற்புடையது அல்ல" விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என கற்றுக் கொள்ளுங்கள் என்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு வரவேண்டிய தொழிற்சாலைகள் வெளிமாநிலங்களுக்கு சென்று விட்டதாக தி.மு.க., உறுப்பினர் ராஜா குற்றம்சாட்டினார்.
தமிழகத்தை விட்டு எந்த தொழில் நிறுவனமும் வெளிமாநிலங்களுக்கு இடம்பெயரவில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதைக்குறித்து பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா:- தொழில்நிறுவனங்கள் தமிழகத்தை தான் நாடி வருகின்றன. தமிழகத்தை விட்டு வேறெங்கும் செல்ல விரும்புவதில்லை. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதும் மற்றொரு காரணம்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் மீது அவர்கள் வீட்டில் வேலை பார்த்த பானுமதி என்ற பெண் தூத்துக்குடி எஸ்.பியிடம் பாலியல் புகார் அளித்துள்ளார்.
கடந்த வாரம் டெல்லி ஏர்போர்ட்டில் திமுக எம்.பி. திருச்சி சிவாவை அடித்ததாக சசிகலா புஷ்பா சர்ச்சையில் சிக்கினார். இதனால் எம்.பி சசிகலா புஷ்பா அ.தி.மு.க கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
முதல்- அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தமிழக வீரர் மற்றும் வீராங்கனை ஊக்கமளிக்கும் வகையில் உயரிய ஊக்கத் தொகை வழங்கி வாழ்த்தினார்.
அதைப்பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் நாயைப் போல அடைத்து வைக்கப்பட்டேன்; என்னுடைய வீட்டுக்குச் செல்லவும் அனுமதிக்கவில்லை என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் முதல்வர் ஜெயலலிதா தம்மை அறைந்தார் என்றும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய மிரட்டினார் எனக் கூறியிருந்தார் சசிகலா புஷ்பா. இதனால் உடனடியாக அதிமுகவில் இருந்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.