நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள நகை கடையில் 60 கிலோ தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
நேற்று கடையின் மேற்கூரையில் துளை போட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அங்கு இருந்த பல வித நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 1 கோடி மதிப்பிலான 716 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூன்று நாள் விடுமுறைக்கு பின்னர் இன்று காலை வந்த ஊழியர்கள் அலுவலகத்திற்குள் வந்து பார்த்த போது லாக்கர்கள் உடைக்கப்பட்டது தெரியவந்தது. நிதிநிறுவனத்தின் பின்புறமாக ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், லாக்கர்களை உடைத்து, 6 பெட்டிகளில் 491 பைகளில் வைக்கப்பட்டிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
சேலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளையடிக்கபட்டு உள்ளது. சேலம் - சென்னை ரெயிலின் மேற்கூரையை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். ரூ342 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் ஒரு ரெயில் பெட்டியில் கொண்டுவரபட்டு உள்ளது. ரெயில் பெட்டியில் இருந்த் 228 பணப்பெட்டிகளை உடைத்து மொத்தம் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.
சேலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளையடிக்கபட்டு உள்ளது. சேலம் -சென்னை ரெயிலின் மேற்கூரையை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். ரூ342 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் ஒரு ரெயில் பெட்டியில் கொண்டுவரபட்டு உள்ளது. ரெயில் பெட்டியில் இருந்த் 228 பணப்பெட்டிகளை உடைத்து பணம் கொள்ளையடிக்கபட்டு உள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ம் தேதி வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவின் புறநகரில் உள்ள வங்காளதேச வணிக வங்கிக்கு பத்துக்கு மேற்பட்ட தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து வங்கியின் மேலாளர் உள்பட 7 பேரை சுட்டுக்கொன்று விட்டு வங்கியில் இருந்து 12 லட்சம் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பினர். தப்பி செல்லும் போது ஒரு திருடனை பிடித்து மக்கள் அடித்துக் கொன்றனர். இச்சம்பவம் வங்காளதேசத்தை அதிர வைத்தது.
தடை செய்யப்பட்ட ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ் தீவிரவாத இயக்கம் தான் இந்த சம்பவத்தை செய்தார்கள் என தெரியவந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.