ரோஜாவுக்கு நான்தான் பெயர் வைத்தேன் - பாரதிராஜா பெருமிதம்

ரோஜாவுக்கு நான்தான் பெயர் வைத்தேன் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 27, 2022, 10:05 PM IST
  • ரோஜாவுக்கு பாராட்டு விழா
  • மே 7ஆம் தேதி ஆந்திர அமைச்சர் ரோஜாவுக்கு பாராட்டு விழா
  • ஆந்திர அமைச்சராக பொறுப்பேற்ற ரோஜா
ரோஜாவுக்கு நான்தான் பெயர் வைத்தேன் - பாரதிராஜா பெருமிதம்

ஆந்திர அரசின் கலாசார, சுற்றுலாத் துறை அமைச்சராக ரோஜா செல்வமணி பொறுப்பேற்றுள்ளார். இதனை பாராட்டும் விதமாக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், இசையமைப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றின் ஆதரவோடு தென்னிந்திய திரைத்துறையினர் இணைந்து இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் மே 7 ஆம் தேதி ரோஜாவுக்கு பாராட்டு விழா நடத்தவுள்ளனர். 

இதனை அறிவிக்கும் விதமாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குநர் பாரதிராஜா, செல்வமணி எனது திரைத்துறை நண்பன், அல்ல குடும்ப நண்பன், ரோஜாவுக்கு நான் தான் பெயர் வைத்தேன். நான் எதை தொட்டு பெயர் வைத்தாலும் விளங்குதே என நான் என் அப்பா அம்மாவை நினைத்து பெருமை கொள்வேன். ரோஜாவுக்கு பெயர் வைத்ததற்கு பெருமை கொள்கிறேன். தனக்கு சரியென்று நினைத்ததை மிக தைரியமாக சொல்லக்கூடிய பெண். 

Bharathiraja

எந்த ஒரு விஷயத்திலும் மிக தெளிவாக இருப்பார். செல்வமணியை மேடையில் நான்தான் பேச வைத்தேன், இப்போது மிக அற்புதமாக பேசுகிறார். அவர் அரசியலுக்கு வந்தால் பெரிய ஆளாக வருவார். தன் மனைவிக்கு உறுதுணையாக இருந்து அவரை வெற்றி பெற வைத்துள்ளார் செல்வமணி. ரோஜா ஒரு மந்திரியாக பதவி ஏற்றிருப்பது பெருமையாக மகிழ்ச்சியாக உள்ளது. தென்னிந்திய திரைத்துறையை சேர்ந்த அனைவரும் கலந்துகொள்ளும் பிரமாண்ட விழாவாக இது இருக்கும். ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட வேண்டும். இந்த விழாவிற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி” என்றார்.

மேலும் படிக்க | முடிவுக்கு வந்த காங்கிரஸ் பிரஷாந்த் கிஷோர் இணைப்பு குஷியில் பாஜக முகாம்

அவரைத் தொடர்ந்து பேசிய ரோஜாவின் கணவரும், இயக்குநருமான ஆர்.கே. செல்வமணி, “மேடையில் பேசுவதென்பது எனக்கு கூச்சம், அதை மாற்றி என்னை பேச்சாளராக்கியது பாரதிராஜா அவர்கள் தான். இன்று மீண்டும் அந்த கூச்சம் வந்துள்ளது. என் மனைவிக்கு பாராட்டு விழா என்றால் நான் இருக்கும் பதவியை தப்பாக பயன்படுத்துவது போல் இருக்கும், வேண்டாம் என ஆர் வி உதயகுமார் அண்ணனிடம் சொன்னேன். இதனை பாரதிராஜா சாரிடம் சொல்ல ஒரு வாரம் தயங்கினேன். அவர் நான் பெயர் வைத்த பெண் நானே தலைமை தாங்கி இவ்விழாவை நடத்தி தருகிறேன் என்றார். அவருக்கு நன்றி. அதிகாரமுள்ள அரசியலில் ஒரு பெண் சாதிப்பது என்பது எத்தனை கடினம் என எனக்கு தெரியும். 

Selvamani

முதலில் அவர் கொஞ்ச நாள் இருப்பார் பின் வந்துவிடுவார் என்று நினைத்தேன். பின்னால் அவர் மேடையில் பேசுவதை பார்த்து மிரண்டுவிட்டேன். அவரிடம் பின் உங்களுக்கு தோன்றுவதை செய்யுங்கள் நான் துணை நிற்கிறேன் என்றேன். அவர் முதல் முறை ஒரு தேர்தலில் தோல்வி அடைந்த போது நான் தோற்று அரசியலிலிருந்து வர மாட்டேன் என்றார். மீண்டும் ஒரு தேர்தலில் தோல்வி. 

மேலும் படிக்க | கண் கலங்க வைக்கும் காட்சி: ஆம்புலன்ஸ்க்கு பணம் இல்லை - மகன் உடலை 90 கி.மீ. சுமந்து சென்ற தந்தை!

அவர் பிரபலமாக, பிரபலமாக சொந்த கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் பெரிய எதிர்ப்பு. மூன்றாவது தேர்தலில் வெற்றி பெற்றார் ஒரு யுத்தத்தில் வென்றதாக பேசினார். அது தான் அவரது குணம், அவரது போராடும் குணம் தான் அவருக்கு வெற்றியை தந்துள்ளது. ஒரு பெண் கலைத்துறையில் இருந்து அரசியலில் வெற்றிபெற்றதற்கே இந்த விழா என எடுத்துக்கொள்ள வேண்டும். அனைவரும் இதில் ஒன்றுபட்டு பாராட்டுவிழா நடத்த ஒன்றிணைந்துள்ளார்கள். எல்லோருக்கும் இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசினார்.

இந்நிகழ்வில் இசையமைப்பாளர் தீனா,இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், தயாரிப்பாளரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News