பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நடிகர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், கமல் ஹாசனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் ஆவேசமடைந்த கமல், விரைவில் அரசியல் பிரவேசம் என்று கூறும் அளவிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டரில் நடிகர் கமல் ஹாசனை கடுமையாக சாடியுள்ளார். அதில்,
கமல் ஒரு ஆடம்பர முட்டாள், அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் போய் சேரப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். முதலில் அவர் ஒரு முட்டாள்.
எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை இழந்துவிட்டதால், அதிமுக ஆட்சி நீடிக்க சசிகலாவிடம் வேறு முதல்வரை அவர் கேட்க வேண்டிய நேரமிது என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் அதிமுக எம்.எல். ஏ.க்கள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் முதல்வர் அழைப்பு விடுத்திருந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 111 எம்எல்ஏக்கள் பங்கேற்றதாக தெரிவித்தார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 9 பேர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறினார்.
தனது உடல்நலத்தை அமெரிக்க கேசினோவில் மேம்படுத்தும் ரஜினிகாந்த் என்று பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி டிவிட் செய்துள்ளார்.
மும்பையில் ‘காலா’ படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்ற பின், அடுத்த வாரம் அவர் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, அமெரிக்காவில் கேசினோ ஒன்றில் ரஜினி அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்பது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து பாஜக ராஜ்ய சபை எம்பி சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இதைக்குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அரசியலமைப்பு சட்டம், அடிப்படை உரிமைகள் முதலியவற்றைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அவர் சினிமாவில் நடிப்பதே சிறந்தது. தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலுக்கு ரஜினிகாந்த் ஏற்றவர் அல்ல என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த விசாரணையை நடத்த நேரமில்லை என்று உச்ச நீதிமன்ற கூறியுள்ளது. சுப்பிரமணியன் சுவாமியிடம் தெரிவித்தனர்.
அயோத்தி வழக்கில் மேல்முறையீடு மனுக்களை விரைவில் விசாரிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை வைத்திருந்தார்.
பாபர் மசூதி வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுரை.
கடந்த 1992-ஆம் டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதியை வன்முறை கும்பல் இடித்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் கூட்டு சதி செய்ததாக சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால், அவர்களை விடுதலை செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் சிபிஐ சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் சட்டப்படு தமிழக ஆளுநர் சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
எஎன்ஐ இடம் சுப்ரமணியன் சுவாமி அளித்துள்ள பேட்டி:-
ஆட்சியமைக்க சசிகலாவுக்கு கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும். சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் காத்திருப்பது ஏன்?
ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் சட்டப்படு தமிழக ஆளுநர் சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழுக்கு சுப்ரமணியம் சுவாமி அளித்துள்ள பேட்டி:-
தமிழக முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தையும், தமிழக பொறுப்பு ஆளுநரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்று அதிமுக நிர்வாகிகள் கூறி வரும் நிலையில் இன்று பாஜக மூத்த தலைவரும் ராஜ்ய சபா உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமியும் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்ப உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
'நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தும் அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி 90 கோடி ரூபாய் கடன் அளித்தது. இந்த நிறுவனத்தின் பங்குகளை, சோனியா, ராகுல் இயக்குனர்களாக இருக்கும் யங் இந்தியா நிறுவனம் விலைக்கு வாங்கியது; இவற்றில் முறைகேடு நடந்துள்ளது என பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை கேட்டு சுப்ரமணியன் சாமி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.