நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஏர்செல் டெலிக்காம் நிறுவனம், மிகப் பெரிய கடன் நெருக்கடியில் சிக்கியதையடுத்து, தனது சேவையை நிறுத்திக்கொண்டது.
இதனால், ஏர்செல் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். ஏற்கெனவே டவர்கள் இயங்காததால் அவதிப்பட்டு வந்த வாடிக்கையாளர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.
இன்னமும் ஏராளமான ஏர்செல் வாடிக்கையாளர்களளுக்கு போர்ட் கோடு கிடைக்காததால் வேறு நிறுவனங்களுக்கு மாற முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
இதையடுத்து, ஏர்செல் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் பலர், தங்களது டெபாசிட் தொகையை அந்நிறுவனம் திருப்பித்தரவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஏர்செல் நிறுவனம் தங்களுக்கு வழங்க வேண்டிய டெபாசித் தொகையை இந்த மாதம் 30ம் தேதிக்குள் திருப்பித்தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுபோல் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் பலர் ரீசார்ஜ் செய்த தொகையை இழந்துள்ளனர்.
இந்நிலையில், பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாத தொகை விவரங்களை மே 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என டிராய் நிறுவனம் தெரிவித்துள்ளது.