பள்ளி கட்டணத்தை அடிக்கடி உயர்த்தினால் இனி இது தான் கதி!

தனியார் பள்ளிகள் அடிக்கடி பள்ளி கட்டணத்தை உயர்த்துவதை தடுப்பதற்கு இனி உ.பி-ல் புதிய சட்டம்! 

Updated: Apr 4, 2018, 09:42 AM IST
பள்ளி கட்டணத்தை அடிக்கடி உயர்த்தினால் இனி இது தான் கதி!
ZeeNewsTamil

உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளிகள் அடிக்கடி பள்ளி கட்டணத்தை உயர்த்துவதாக பெற்றோர்கள் தரப்பில் இருந்து அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. 

இது போன்ற சம்பவங்களை தடுக்கும் விதத்தில் புதிய சட்டத்தை அமல் படுத்த அம்மாநிலத்தை அரசான பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, தனியார் பள்ளிக் கட்டணம் ஒழுங்கு முறை சட்டம் என்ற பெயரில் புதிய சட்டத்தை இயற்றுவதற்கான முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்தப் புதிய சட்டத்தின் படி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தனியார் பள்ளிகளில் 7 சதவிதம் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள முடியும். இந்தச் சட்டம் ஆண்டுக்கு ரூ.20,000 முதல் கட்டணமாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தும் என்று அலோசனை கூட்டத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் துணை முதல்வர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார். 

இந்த புதிய சட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகள் லட்சக் கணக்கில் நன்கொடை வசூலிப்படுவது தடுக்கப்படும். அப்படி வசூல் செய்தால் அந்த தனியார் பள்ளிகளின் அங்கீகாரமும் ரத்தாகும் வகையில் புதியச் சட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.