தூய்மைப் பணியாளர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம்: வீடியோ வெளியாகி அதிர்ச்சி
திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையால் தூய்மைப் பணியாளர்கள் நோயாளிகளுக்கு ட்ரிப்ஸ் ஏற்றி சிகிச்சை அளிக்கும் அவலநிலை குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.