தேர்தலில் வாக்காளர்களுக்கு முறைகேடாக பணம் கொடுப்பதைத் தடுக்க வங்கிகள் கண்காணிக்கப்படும் என்று மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.