தங்க முலாம் பூசப்பட்ட எகிப்திய மம்மி: பண்டைய வரலாற்றின் ஆயிரக்கணக்கான ரகசியங்கள் எகிப்தின் மணலுக்கு அடியில் புதைந்துள்ளன. எகிப்தில் தற்போது அகழ்வாராய்ச்சியாளர்கள் குழு தற்போது சுமார் 4300 ஆண்டுகள் பழமையான தங்கத்தால் பூசப்பட்ட மம்மியை கண்டுபிடித்துள்ளனர். 50 அடி ஆழத்தில் சுண்ணாம்புக் கல்லால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் காணப்படும் இந்த மம்மியின் பெயர் 'ஹெகாஷெப்ஸ்' என்பதாகும். 4300 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தின் அரசின் காலவராக இருந்த மனிதனின் மம்மி தங்க முலாம் பூசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. முழுக்க முழுக்க தங்க முலாம் பூசப்பட்டிருக்கும் மம்மி நாட்டில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளில் மிகப் பழமையானதாக இருக்கலாம் என எகிப்து அகழ்வாராய்ச்சிக் குழுவின் இயக்குநர் ஹவாஸ் கூறினார்.
கிசாவின் பிரமிடுகளுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மி
பிரபல எகிப்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜாஹி ஹவாஸ், கிசாவின் பிரமிடுகளுக்கு அருகிலுள்ள சக்காரா நெக்ரோபோலிஸில் 4300 ஆண்டுகள் பழமையான மம்மியைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார். இந்த மம்மி ஒரு ஆணின் மம்மி என்றும் இந்த மம்மி எகிப்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளில் மிகவும் பழமையானது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் ஹவாஸை மேற்கோள்காட்டி செய்தியாளர் கூட்டத்தில் வியாழக்கிழமை தெரிவித்தது.
தங்க முலாம் பூசப்பட்ட மம்மி
தங்க முலாம் மூடப்பட்ட மம்மி, 15 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள ஒரு அறையில் ஒரு பெரிய செவ்வக சுண்ணாம்பு கல்லால் செய்யப்பட்ட பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கூறினார். அங்கே பல கல் பாத்திரங்கள் காணப்பட்டன,
தளத்தில் ஒரு பெரிய கல்லறை
பழமையான மம்மி, எகிப்து அரசின் ஐந்தாவது மற்றும் ஆறாவது வம்சத்தைச் சேர்ந்த கல்லறைகளின் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பின் ஒரு பகுதியாகும் என்று சக்காராவில் உள்ள கிஸ்ர் எல்-முதிர் பகுதியில் உள்ள பழங்கால பொருட்கள் ஆராய்ச்சி தொடர்பான கவுன்சிலுடன் பணிபுரியும் எகிப்திய அகழ்வாராய்ச்சி குழுவின் இயக்குனர் ஹவாஸ் கூறினார். புதிய கண்டுபிடிப்புகள் அந்த இடத்தில் ஒரு பெரிய கல்லறையை உள்ளடக்கியிருப்பதைக் குறிக்கிறது என்று அவர் விளக்கினார்.
மேலும் படிக்க | எகிப்தின் கல்லறையில் 2600 ஆண்டுகள் பழமையான ‘Cheese’; ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!
புதிய கண்டுபிடிப்புகளில் ஒன்று
ஹவாஸின் கூற்றுப்படி, புதிய கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது ஐந்தாவது வம்சத்தின் கடைசி மன்னரான கானும்ட்ஜெடெப் என்பவருக்கு சொந்தமான ஒரு கல்லறை ஆகும். கானும்ட்ஜெடெப்பின் கல்லறை அன்றாட வாழ்க்கையின் கல்வெட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பெரிய கல்லறை மேரியின் கல்லறையாகும், அவர் இரகசியங்களைக் காப்பவராகவும், அரண்மனையின் தலைவரின் உதவியாளராகவும் இருந்தார். இந்த பணியில் மெஸ்ஸிக்கு அருகில் உள்ள மூன்றாவது கல்லறையையும் கண்டுபிடித்தது. இதில் 9 அழகிய சிலைகள் உள்ளன.
மம்மி, சிலைகள் மற்றும் அணிகலன்கள்
ஹவாஸ் கூறுகையில், 10 மீட்டர் ஆழமுள்ள மற்றோரு பகுதியில் அழகான மரச் சிலைகள், ஃபெடெக் என்ற மனிதனைக் குறிக்கும் மூன்று கல் சிலைகள், ஒரு மேசை, கல்லறை ஆகியவற்றைக் கொண்டிருந்தது. அதில் மம்மி இருந்தது. எகிப்திய அகழ்வாராய்ச்சியில் அந்த இடத்தில் பல தாயத்துக்கள், கல் பாத்திரங்கள், அன்றாட வாழ்க்கைக்கான கருவிகள் மற்றும் சிலைகள் ஆகியவற்றைக் கண்டறிந்ததாக அவர் கூறினார்.
மேலும் படிக்க | Egyptian Mummy: கர்ப்பிணி மம்மியின் ஆராய்ச்சியில் வெளியான ஆச்சர்ய தகவல்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ