பிரிட்டன் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் மாளிகையில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, பால்மோரல் மாளிகையில் இருந்து கடந்த 11-ந்தேதி, அவரது உடல் ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.
முதலில் ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்ட உடல், செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் நேற்று இரவு இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். பின்னர் ராணியின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வனேசா நந்தகுமாரன் என்ற 56 வயது பெண்மணி, 2 தினங்களாக வெஸ்ட்மினிஸ்டரில் வரிசையில் காத்திருக்கிறார். இவர் தான் வெஸ்ட்மின்ஸ்ட ர் மண்டபத்தில் ராணியின் உடலுக்கு முதன்முதலில் அஞ்சலி செலுத்துவார். இலங்கையைச் சேர்ந்த வனெசா நந்த குமாரன், நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். ராணியின் சேவைக்கு நன்றி செலுத்துவற்காக காத்திருப்பதை பொருட்படுத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸின் செய்தித் தொடர்பாளர் அளித்த தகவலின்படி, ராணியின் இறுதிச்சடங்கில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தகுந்த ஆடைகளை அணியுமாறும், மொபைல் போன்களை சார்ஜ் செய்ய தகுந்த முன்னேற்பாடுகளை செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் படிக்க | இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ