உயிருடன் இருப்பதை நிரூபிக்க போராடும் French பெண்

பிரான்சு நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் இன்னும் இறக்கவில்லை, என்மீது இரக்கப்படுங்கள் என்று இறைஞ்சுகிறார். தனது இருப்பை நிரூபிக்க போராடுகிறார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 11, 2021, 09:47 PM IST
  • தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க போராடும் பெண்
  • பணியாளரால் வந்த பிரச்சனை
  • வழக்குத் தொடுக்கத் தயாராகும் பெண்
உயிருடன் இருப்பதை நிரூபிக்க போராடும் French பெண் title=

உலகில் தினசரி வித்தியாசமான நிகழ்வுகளை பார்க்கிறோம். அந்த வரிசையில் மற்றுமொரு நிகழ்வாக, தான் இன்னும் இறக்கவில்லை, உயிருடன் இருக்கிறேன் என்று சொல்லி, தனது இருப்பை நிரூபிக்க போராடிக் கொண்டிருக்கிறார். பிரெஞ்சு பெண், ஜீன் பெளச்சைன் (Jeanne Pouchain) வித்தியாசமான பிரச்சனையை எதிர்கொண்டுள்ளார். தனது முன்னாள் ஊழியருடன் நீண்டகாலமாக நிலவி வரும் சர்ச்சைக்கு எதிராக சட்டப்பூர்வமாக போராடத் தயாராகி வருகிறார் இந்த பெண்.

பல ஆண்டுகளுக்கு பெளச்சினின் துப்புரவு நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் (Employee) ஒருவர் ஜீன் பெளச்சைன் (Jeanne Pouchain) இறந்துவிட்டதாக அறிவித்தார். 2017 நவம்பர் மாதம் முதல் இன்று வரை தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க முயற்சித்து வருகிறார்.

அண்மையில் லியோன் (Lyon) என்ற ஊருக்கு அருகிலுள்ள தென்கிழக்கு நகரமான செயிண்ட்-ஜோசப் நகரில் உள்ள தனது வீட்டில் ஜீன் பெளச்சைன் (Jeanne Pouchain) இருப்பதை உறுதி செய்ய, AFP செய்தி நிறுவனம் செய்தியாளர்களை அனுப்பி அந்த பெண் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தியது.

ALSO READ | அதிபர் டிரம்ப் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்: சபாநாயகர் நான்ஸி பெலோஸி

ஜீன் பெளச்சைன் (Jeanne Pouchain) இறந்துவிட்டதாக முன்னாள் ஊழியர் ஒருவர் வழங்கிய பொய்த் தகவலால், 58 வயதான பெண்ணின் (Woman) வாழ்க்கை ஒரு கணத்தில் சிதைந்து போனது. அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களிலிருந்து அந்த பெண்ணின் இருப்பு பற்றிய அனைத்து பதிவுகளும் அழிக்கப்பட்டன. உயிருடன் இருந்தும் அவர் இருப்பதற்கான ஆதாரங்களும் இல்லை, அவருக்கு சுகாதார காப்பீடும் இல்லை.

தனது கணவர் மற்றும் மகனிடமிருந்து சட்டரீதியான இழப்பீடை பெறுவதற்காக தான் இறந்துவிட்டதாக தனது முன்னாள் ஊழியர் ஆதாரங்களை இட்டுக்கட்டியதாக பெளச்சின் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் ஊழியரும் இரண்டு முறை பெளச்சின் மீது வழக்குத் தொடர முயன்றார், ஆனால் அதனால் அவருக்கு எந்தவித பயனும் கிடைக்கவில்லை.  

"இது ஒரு பைத்தியக்காரத்தனமான கதை," என்று பெளச்சின் என்ற பெண்ணின் வழக்கறிஞர் (Lawyer) சில்வைன் கோர்மியர் (Sylvain Cormier) AFP இடம் கூறினார். இதுபற்றி கூறும் அவர், "எந்தவொரு ஆதாரத்தையும் வழங்காமல், திருமதி பெளச்சின் இறந்துவிட்டதாக வாதி கூறினார், எல்லோரும் அவளை நம்பினர். யாரும் விஷயத்தை சரிபார்க்கவில்லை" என்று தெரிவித்தார்.

Also Read | 1,075 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற மதத்தலைவர் யார் தெரியுமா?

2000 ஆம் ஆண்டில் ஜீன் பெளச்சைன் (Jeanne Pouchain) நடத்தி வந்த துப்புரவு நிறுவனத்திற்கு ஒரு பெரிய ஒப்பந்தத்தை கைநழுவிப்போனது. அப்போது பல ஊழியர்களுக்கு வேலை இல்லாமல் போனது. ஆனால், வேலையை இழந்த ஒரு பணியாளர், தொழிலாளர் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கின் தீர்ப்பு 2004 ஆம் ஆண்டில் வெளியானது. அதன்படி 14,000 யூரோக்கள் இழப்பீடு வழங்க வெண்டியிருந்தது. இருப்பினும், பதிவுசெய்யப்பட்ட வழக்கு நிறுவனத்திற்கு எதிராக இருந்தது, ஜீன் பெளச்சைன் (Jeanne Pouchain) என்ற தனிநபருக்கு எதிரானது அல்ல என்பதால் அவருக்கு நேரடி பாதிப்பு ஏற்படவில்லை.  

தனக்கு எதிரான வழக்கைத் தவிர்ப்பதற்காக, தான் இறந்துவிட்டதாக, ஜீன் பெளச்சைன் (Jeanne Pouchain) போலியாக நடித்ததாகவும் சிலர் கூறுகின்றனர். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஜீன் பெளச்சைன் (Jeanne Pouchain), "நான் இன்னும் இறந்துவிடவில்லை, ஆனால் நான் இன்னும் உயிருடன் இல்லை என்று மாநில நிறுவனங்கள் என்னிடம் கூறுகின்றன, நான் வழக்குத் தொடுக்க தயாராகிறேன்!" என்று கூறுகிறார்.

ALSO READ | இரண்டாம் உலக போரில் ஹிட்லர் தாக்கிய இந்திய கப்பல்... சுவாரஸ்யமான தகவல்கள்..!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News