வட கொரியா ஒரு விநோதமான நாடு. அங்குள்ள மக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், என்ன ஆடை உடுத்த வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதை அதன் சர்வாதிகாரி கின் ஜாங் உன் (Kim Jong Un) தான் நிர்ணயிக்கிறார். வட கொரியாவில் ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை என்ற கதை தான்.
அந்த வகையில், சமீபத்தில் வடகொரியாவில் தடை செய்யப்பட்ட திரைப்படத்தை ஐந்து நிமிடம் பார்த்த இளைஞர் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் கொரிய திரைப்படமான ‘தி அங்கிள்’ திரைப்படத்தை 5 நிமிடங்கள் பார்த்ததற்காக யாங்காங் மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது மாணவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பிற வடகொரிய 'எதிரி' நாடுகளின் அனைத்து வகையான படைப்புகள் மற்றும் பொருட்களும் வட கொரியாவில் (North Korea) முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன.
எதிரி நாடுகளின் கலை படைப்புகளை கண்டு களிப்பது என்பது தேச விரோத செயலாக கருதப்படுகிறது. அந்த வகையில், ஹைசன் சிட்டியின் நடுநிலைப் பள்ளி மாணவர் ஒருவர் தடை செய்யப்பட்ட திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார் என்று ஒரு உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ALSO READ | ‘நிறைய சாப்பிட்டா நாட்டுக்கு நல்லதல்ல’: அதிபர் கிம்மின் லேட்டஸ்ட் உத்தரவு
தென் கொரிய திரைப்படங்கள், பதிவுகள், புத்தகங்கள், பாடல்கள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களை நேரடியாகப் பார்த்த, கேட்ட, அல்லது வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு, அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரையிலான கடுமையான சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
முன்னதாக, பிரபல நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சியான ஸ்க்விட் கேமைப் பார்த்த வடகொரிய மாணவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டதாக, அமெரிக்க செய்தி ஊடகமான ரேடியோ ஃப்ரீ ஏசியா தெரிவித்துள்ளது. யூ.எஸ்.பி டிரைவ்களில் நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சியை டவுன்லோட் செய்தவர்களை அதிகாரிகள் கண்டறிந்து, நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சியை பதிவிறக்கம் செய்த இருவரில், ஒருவருக்கு ஐந்து ஆண்டுகளூம் மற்றொருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. தென் கொரிய நாடகத்தை USB கருவியில் பதிவிறக்கம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ALSO READ | நடுவானில் பயங்கரம்! விமானத்தின் மீது மோதிய பறவைக் கூட்டம்; நடந்தது என்ன!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR