நடுவானில் பயங்கரம்! விமானத்தின் மீது மோதிய பறவைக் கூட்டம்; நடந்தது என்ன!

இத்தாலியில் உள்ள போலோக்னா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்பு, ரியான் ஏர் ஜெட் ஹெரான் பறவைகள் மோதியதில், விமானத்தின் கண்ணாடிகளில் ரத்தம் தெறித்தது.  

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 1, 2021, 02:44 PM IST
  • இத்தாலியில் ஹெரான் பறவைகள் கூட்டம் விமானத்துடன் மோதியது
  • இரத்தக் கறை படிந்த விமானத்தின் கண்ணாடி.
  • விமானியின் சமயோஜித நடவடிக்கை காரணமாக விமான விபத்து தவிர்க்கப்பட்டது.
நடுவானில் பயங்கரம்! விமானத்தின் மீது மோதிய பறவைக் கூட்டம்; நடந்தது என்ன!

ரோம்: விமானங்களின் மீது பறவை மோதும் சம்பவங்கள் பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். விமானத்தின் மீது பறவைகள் மோதும் போது, அதனால் அதன் உடல் பகுதி மீது ஏற்படும் பாதிப்புகள், விரிசல்கள் ஆகியவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதோடு, பறவைகள் எஞ்சினுக்குள் சிக்கிக் கொண்டால் எஞ்சின் செயல் இழந்து பெரும் விபத்து ஏற்படலாம். இது பயணிகளின் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

சமீபத்தில் அப்படி ஒரு சம்பவம் இத்தாலியில் நடந்துள்ளது. காற்றில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் மீது பறவைகள் கூட்டம் ஒன்று மோதியதை அடுத்து, விமானத்தின் இயந்திரம் தீப்பிடித்தது. பறவைகள் மோதிய பிறகு, விமானத்தின் கண்ணாடியில் அதன் ரத்தத் துளிகள் சிறகுகளும் காணப்பட்டன. இதன் காரணமாக விமானியால் பார்க்க கூட முடியாமல் போனது.

இத்தாலியில் உள்ள போலோக்னா விமான நிலையத்தில் (Bologna Airport)  தரையிறங்குவதற்கு சற்று முன்பு, ரியானேர் ஜெட் விமானம் மீது ஹெரான் பறவைகள் (ஹெரான்கள்) கூட்டம் மோதியது.

ALSO READ | சிறுகோள் மீது NASA - SpaceX ஏவும் விண்கலம்; பூமிக்கு வரும் ஆபத்து தவிர்க்கப்படுமா..!!

இரத்தக் கறை படிந்த விமானத்தின் கண்ணாடி

ரயன்ஏர் போயிங் (Ryanair Jet) 737- 800 விமானம் பயணிகளுடன் லண்டனில் இருந்து புறப்பட்டதாக 'டெய்லி மெயில்' நாளிதழில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெரான் மீது மோதியதில் விமானத்தின் கண்ணாடியில் ரத்தக்கறை படிந்தது. விமானத்தின் பல பகுதிகளில் பறவைகளின் இறகுகள் சிக்கின. பல பறவைகள் என்ஜினிலும் நுழைந்ததால், அங்கு தீப்பிடித்தது.

என்ஜினில் இருந்து தீப்பிழம்புகள் வெளியே வந்து கொண்டிருந்தன

விமானம் இத்தாலிய விமான நிலையத்தின் ஓடுபாதையை அடைவதற்கு முன்பு பறவைகள் கூட்டம் மோதியது, ஹெரான்களின் இரத்தம் ஜன்னல்களிலும் தெறித்தது. விமான இயந்திரம் கடுமையாக சேதமடைந்தது.

விமானியின் சமயோஜித நடவடிக்கை 

விமானியின் சமயோஜித நடவடிக்கை காரணமாக விமான விபத்து தவிர்க்கப்பட்டது விமானத்தின் எஞ்சினில் இருந்து தீப்பிழம்புகள் காற்றில் பறந்த சூழ்நிலையில் விமானி மிகுந்த கவனத்துடன் விமானத்தை தரையிறக்கினார். விமானிகள் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர் மற்றும் அதில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ALSO READ | விண்வெளியில் போர் மூண்டால் சாமான்யரின் வாழ்க்கையும் ஸ்தபித்து விடும்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News