பிணங்களுடன் உடலுறவு மேற்கொண்ட இளைஞருக்கு 6 வருடம் சிறை!!

போதை பழக்கத்துக்கு அடிமையான மனிதர் ஒருவர் இறந்த பிணங்களுடன் உடலுறவு வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!!

Updated: Apr 14, 2019, 01:51 PM IST
பிணங்களுடன் உடலுறவு மேற்கொண்ட இளைஞருக்கு 6 வருடம் சிறை!!

போதை பழக்கத்துக்கு அடிமையான மனிதர் ஒருவர் இறந்த பிணங்களுடன் உடலுறவு வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!!

லண்டனை சேர்ந்த 23 வயதாகும் 'கசீம் குரம்' (Kasim Khuram) என்பவர் சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதற்காக அவர் பலமுறை சிறைக்கு சென்றுள்ளார். போதை பழக்கத்துக்கு அடிமையான அவருக்கு மது, கஞ்சா மற்றும் சில வினோதமான போதை பழக்கங்களும் இருந்துள்ளது. ஒருநாள் பயங்கர போதையில் இருந்த அவர் லண்டனில் இருக்கும் ஒரு ''பிணவறைக்கு'' சென்றுள்ளார். திடீரென்று அங்கிருந்த பிணங்களுடன் உடலுறவில் ஈடுபட தொடங்கியுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அவரை பிடித்து போலீசில் ஓப்படைத்துள்ளனர். வழக்கு பதிவு செய்த பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, விசாரணையின் போது அவர் அங்கிருந்த 9 பிணங்களையும் பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. பிணங்களின் மேல் ஏற்பட கூடிய  இந்த வினோத ஈர்ப்புக்கு ஆங்கிலத்தில் ''Necrophilia'' என்று பெயர் . இந்த பழக்கம் பழங்கால எகிப்தில் புழக்கத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும், இது ஒன்றும் புதிதல்ல என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

மேலும், கடுமையான போதைப்பழக்கம் காரணமாக தான் அவர் இப்படி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. நீதிமன்ற விசாரணையின் போது "அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். அவரோ "தெரியாமல் செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்" என்று மன்னிப்பும் கேட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.