டயானா - சார்லஸ் திருமணத்தின் கேக்... 41 ஆண்டுகள் பின் ஏலம் - விலை இவ்வளவா?

தற்போதைய இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் - டயானா ஆகியோரின் திருமணத்திற்கு தயாரிக்கப்ட்ட கேக்கின் ஒரு துண்டு தற்போது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 21, 2022, 02:54 PM IST
  • இந்த கேக் மொத்தம் 5 அடி உயரமும், 5 அடுக்குகளையும் கொண்டது.
  • தற்போது ஏலத்திற்கு போன கேக் துண்டு, அந்த கேக்கின் மையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
  • இதே கேக்கின் மற்றொரு துண்டு 2014ஆம் ஆண்டு ஏலத்திற்கு போனது.
டயானா - சார்லஸ் திருமணத்தின் கேக்... 41 ஆண்டுகள் பின் ஏலம் - விலை இவ்வளவா? title=

இங்கிலாந்து அரச பரம்பரையிலேயே மிகவும் புகழ்பெற்ற திருமணம் என்றால், அது தற்போது அரசர் மூன்றாம் சார்லஸ் - இளவரசி டயானா ஆகியோருடையதுதான். 1981ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி நடைபெற்ற பிரம்மாண்டமான அரச குடும்ப திருமணத்தை ஒட்டுமொத்த இங்கிலாந்து கோலகலமாக கொண்டாடியது. 

அந்த வகையில், அந்த சிறப்புமிக்க திருமணத்திற்கு செய்யப்பட்ட கேக் துண்டு தற்போது ஏலத்தில் விற்கப்பட்டது. அந்த கேக் துண்டு 170 பவுண்டுக்கு (ரூ. 15,854) ஏலத்தில் வாங்கப்பட்டது. 

ஏலத்திற்கு முன்னதாக, அந்த கேக் துண்டு, 300 பவுண்டுக்கு (ரூ. 28,000) விலை நிர்ணயிக்கப்பட்டதாக ஏலம் விட்டவரின் இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், ஏலத்தின்போது, அதன் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைவாக ஏலத்திற்கு போயுள்ளது. 

மேலும் படிக்க | இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்!

சுமார் 41 ஆண்டுக்கால அந்த கேக் துண்டை, சார்லஸ் - டயானா திருமணத்தில் பங்கேற்ற நிகல் ரிக்கெட்ஸ் என்பவர் அதை பதப்படுத்தி வைத்துள்ளார். அவர் இங்கிலாந்தின் விண்ட்சர் கோட்டையில் 1980 -1985ஆம் ஆண்டுகள் வரை பணிபுரிந்துள்ளார். அவர் கடந்த ஆண்டு உயிரிழந்தததாக கூறப்படுகிறது. 

சார்லஸ் - டயானா அவர்களின் திருமணத்தில் வெட்டப்பட்ட ப்ரூட் கேக்கின் மையப்பகுதியில் இருந்து அந்த கேக் துண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதில், கேக் மொத்தம் 5 அடி உயரமும், 5 அடுக்குகளையும் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

Royal Wedding Cake

அதாவது, அரச குடும்ப திருமணத்திற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் 23 கேக்களில், அந்த ப்ரூட் கேக்கும் ஒன்று என தெரிவிக்கப்படுகிறது. 

அந்த கேக் துண்டை, ஒரு பாக்ஸில் போட்டு, அதில் "பக்கிங்காம் மாளிகை" மற்றும் திருமண தேதி ஆகியவை அச்சிட்டப்பட்டு விநியோக்கிக்கப்பட்டுள்ளது.  2014ஆம் ஆண்டில், அதே கேக்கின் மற்றொரு துண்டு 990 பவுண்டிற்கு (ரூ. 91,772) விற்கப்பட்டது. 

தற்போது, ஏலம் விடப்பட்ட கேக் துண்டை பதப்படுத்தி வைத்திருந்த ரிக்கெட்ஸ் மற்றும் அவருடன் பணியாற்றிய சக ஊழியர்களும் சேர்ந்து, சார்லஸ் - டயானா ஆகியோருக்கு ஒரு எழுத்து மேசை திருமண பரிசாக வழங்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. 

இளவரசி டயானா மற்றும் அரசர் மூன்றாம் சார்லஸ் ஆகியோரின் அரச திருமணமானது 'நூற்றாண்டின் திருமணம்' என்று அழைக்கப்பட்டது. இருப்பினும், அவர்களது திருமணம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மட்டுமே நீடித்தது. இந்த அரச தம்பதியினர் 1992ஆம் ஆண்டு பிரிந்தனர். அதனையடுத்து, நான்கு ஆண்டுகள் கழித்து இருவருக்கும் சட்டப்பூர்வமாக விவாகரத்தானது. 1997ஆம் ஆண்டு, டயானா கார் விபத்தில் உயிரிழந்தார். 

மேலும் படிக்க | 45 நாள்களில் பதவி காலி... லிஸ் ட்ரஸ் ராஜினாமா - இங்கிலாந்தின் அடுத்த பிரமதர் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News