Dubai Airshow: நவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை களமிறக்கும் ரஷ்யா!

துபாய் ஏர்ஷோவில் ரஷ்யா புதிய ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை களமிறக்கி அதிரடி காட்டுகிறது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 15, 2021, 02:41 PM IST
  • துபாய் ஏர்ஷோவில் நவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை களமிறக்கிய ரஷ்யா
  • UAE குழுவும் ரஷ்ய விமானத்தை பார்வையிட்டது
  • அமெரிக்காவிடமிருந்து F-35 போர் விமானங்களை UAE வாங்கும் நிலையில் இந்த முன்னேற்றம்
Dubai Airshow: நவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை களமிறக்கும் ரஷ்யா! title=

துபாய்: ரஷ்யா தனது புதிய ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் முன்மாதிரியை துபாய் ஏர்ஷோவில் காட்சிப்படுத்தியது. சுகோய் சு-75 செக்மேட் ஒரே நேரத்தில் ஐந்து வான் ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது என்பது இதன் சிறப்பம்சம். மேலும், பல இலக்குகளை ஒரே நேரத்தில் அழிக்கும் வல்லமை பெற்றது. 

செலவு குறைந்த போர் விமானமாக வடிவமைக்கப்பட்ட செக்மேட் (Checkmate), 2,800-2,900 கிலோமீட்டர் தூரத்திலும் பறக்கக்கூடியது. விமான உலகில் இருந்து பல புதிய விமானங்கள் கலந்துக் கொண்ட துபாய் ஏர்ஷோ களை கட்டியது. அனைத்து விமானங்களும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த போதிலும், ஐந்தாம் தலைமுறை செக்மேட் விமானம் தனி ஈர்ப்பை பெற்றுள்ளது.  

ஞாயிற்றுக்கிழமை துபாய் ஏர்ஷோவில் ரஷ்யாவால் காட்சிப்படுத்தப்பட்ட விமானம்,  அதன் புதிய ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் முன்மாதிரி ஆகும். அமெரிக்காவிடமிருந்து F-35 போர் விமானங்களை வாங்குவதற்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஒப்பந்தம் மெதுவாக முன்னேறி வரும் நேரத்தில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதம் வெளியிடப்பட்ட சுகோய் சு-75 செக்மேட், ரஷ்யாவிற்கு வெளியே காட்டப்படுவது இதுவே முதல் முறையாகும். சவுதி அரேபிய தூதுக்குழுவும் ரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறை விமானத்தை பார்வையிட்டதாக   ரஷ்ய அரசு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

DUBAI

நிகழ்ச்சியில், ஆங்கில மொழியில் வெளியிடப்பட்ட வீடியோவில்,  இந்த சூப்பர்  போர்விமானம் காட்டப்பட்டது.  இந்த விமானம் ஒரே நேரத்தில் ஐந்து வான் ஏவுகணைகளை சுமந்து சென்று பல இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் திறன் கொண்டது.

 ஜூலை மாதம் இந்த விமானத்தை அறிமுகப்படுத்தும்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விமானத்தை பார்வையிட்டார். 

READ ALSO | திடீரென கணக்கில் வந்த ஒரு கோடி பணம்; வரம் என நினைத்தது சாபமானது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News